சென்னை, பிப்.2 தமிழ்நாட்டைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மய்யத்திலும், கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வு பயிற்சி நிலையங்களிலும், மத்தியதேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2022ஆம் ஆண்டுஜூனில் நடைபெற உள்ள குடிமைப்பணி முதல் நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத்தேர்வு ஜன.23இல் நடைபெற இருந்தது. இதற்கிடையே, கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிப்பால், நுழைவுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், பிப்.1ஆம் தேதிமுதல் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட தமிழ்நாடு அரசுஅனுமதியளித்துள்ளது. எனவேதள்ளிவைக்கப்பட்ட நுழைவுத்தேர்வு பிப்.27ஆம் தேதி நடைபெறும். பிப்.21 முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பயிற்சி மய்ய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
இத்தேர்வு இரண்டரை மணிநேரம் நடைபெறும். பெறப்பட்டவிண்ணப்பங்கள் அடிப்படையில்தேர்வு மய்யம் நிர்ணயிக்கப்படும். மேலும் விவரங்களை இணையதளம் மற்றும் 044-24621475 என்ற தொலைப்பேசி வாயிலாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment