ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2022 மாநில மொழி கல்வி ஊக்குவிப்பு, 200 கல்வித் தொலைக்காட்சி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதிநிலை அறிக்கை தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2022 மாநில மொழி கல்வி ஊக்குவிப்பு, 200 கல்வித் தொலைக்காட்சி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதிநிலை அறிக்கை தாக்கல்

புதுடில்லி, பிப் 1 ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் ªச்ய்தார். இதில், மாநில மொழி கல்வி ஊக்கு ஊக்குவிப்பு, கிசான் ட்ரோன் திட்டம், ஏழைகளுக்கு வீடுகள் கட்ட 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, குடிநீர் இணைப்பிற்காக ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. ஒன்றிய நிதிநிலை அறிக்கைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில் இன்று (1.2.2022) காலை 11 மணிக்கு மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.   மின்னணு முறையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பல்வேறு அறிவிப்புகளை வெளி யிட்ட அமைச்சர், மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.  கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மன ரீதியாக சிகிச் சைகள் அளிக்க மய்யங்கள் உருவாக்கப் படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கரோனா தொற்றுக் காலத்தில் கிராமப்புற பகுதிகளில், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் அதிகப்படியாக பாதிக் கப்பட்டனர். அதனை கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகள், இணையம் வழி யாக டிஜிட்டல் பாடத் திட்டங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறி யுள்ளார்.

1-_12ஆம் வகுப்புகளுக்கு மாநில மொழிகளில் பாடங்களை கற்றுத்தர 200 கல்வி தொலைக்காட்சி அலை வரிசைகள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளது.

விவசாய நிலங்களை  அளவிட கிசான் டிரோன் திட்டம் கொண்டு வரப்படு கிறது.  டிரோன் மூலம் நிலங்களை அளப் பது மற்றும் வேளாண் விளைச்சலை கணிப்பது போன்ற பணிகளுக்கு கிசான் ட்ரோன் திட்டம் பயனளிக்கும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

ஏழை மக்களுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்றும்  குடிநீர் இணைப்பிற்காக ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். டிஜிட்டல் பேங்கிங், இண்டெர்நெட் பேங்கிங் போன்றவை அதிகமாக வளர்ந் துள்ளது. இந்த வசதிகள் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை அரசு உறுதி செய்யும். 75 டிஜிட் டல் பேங்கிங் யூனிட்டுகள் 75ஆவது சுதந்திர நாளை கொண்டாடும் வகை யில் 75 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படும்.

 இயற்கை விவசாயம், நவீன விவசாயம் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விவசாயப் பல்கலைக் கழகங்களின் பாடத் திட்டங்களைத் திருத்துவதற்கு மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும். எண் ணெய் வித்துகள், சிறு தானிய உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளில் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் 400 ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 22,000 கி.மீ. தூரத்திற்கு ரயில்பாதைகள் மேம்படுத்தப்படும். உள்ளூர் வணி கங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம் ஒரு உற்பத்தி பொருள் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கோதாவரி - காவேரி, காவேரி - பெண்ணாறு நதி இணைப்பு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும்.  இந்தியாவில்

5 நதிகள் இணைப்பு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ரூ. 44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment