திருப்பத்தூர், பிப்.6 வாக்குப்பதிவு அலுவலர் களுக்கான 2ஆம் கட்ட பயிற்சி 10ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 4 நகராட்சிகளில் 126 வார்டுகள் மற்றும் ஆலங்காயம், உதயேந்திரம், நாட்டறம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளில் 45 வார்டுகள் ஆகியவற்றில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வருகிற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வருகிற 9ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் இரண்டாம் கட்ட பயிற்சி 10ஆம் தேதி அன்று நடைப்பெற உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி 10ஆம் தேதி ஏற்கனவே, நடைபெற்ற பயிற்சி மய்யங்களிலேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment