தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பது, ஊர் நலம் பெருக பெரிதும் உதவிடும்!
உள்ளாட்சியை
நல்லாட்சியாகத் தொடர தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் தேர்தலில் பேராதரவு தரும் வகையில் வாக் களிப்பது, ஊர் நலம் பெருக பெரிதும் உத விடும் என்று
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை
வருமாறு:
வருகின்ற
19ஆம் தேதி (பிப்.) அன்று நகர்ப்புற அமைப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற்று 22.2.2022ஆம் தேதியில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.
பல
ஆண்டுகளாக ஊராட்சி மன்றங்களுக்கும், மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கும் அ.தி.மு.க.வின் ஆட்சி
காலத்தில் தேர்தல்
நடத்தப்படாமல், தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே வந்ததை, 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' மு.க. ஸ்டாலின்
அவர்கள் தலைமையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் தி.மு.க.
ஆட்சி அமைந்த பிறகு சென்ற சில வாரங்களுக்கு முன்பு ஊராட்சி மற்றும் மாவட்ட கவுன்சில் அமைப்புகள் போன்றவைகளுக்கு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன.
இப்போது
அடுத்த கட்டமாக, நகராட்சிகள் - மாநகராட்சிகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் களம் காண ஆயத்தமாகி விட்டார்கள்.
மக்களாட்சியின்
தொடக்கப் பள்ளிதான்...
மக்களாட்சியின்
தொடக்கப் பள்ளிதான் ஊராட்சி என்ற உள்ளாட்சித் துறைத் தேர்தல், அதன் அடுத்த படிக்கட்டுகள் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடப்புகள்.
இந்த
உள்ளாட்சி, நல்லாட்சியாக நடைபெற வேண்டுமானால், இதில் கட்சிக் கண்ணோட்டமின்றி - அந்த அடிப்படையில் நடைபெறாமலேயே பொது நிலையில் நடைபெற வேண்டும். மேலும் பல வன்மங்களும், வன்முறைகளும்கூட
தவிர்க்கப்படலாம்; வேட்பாளர்கள் வல்லவர்களாக இருந்து ஜெயிப்பதைவிட, நல்லவர்களாக ஊழல், தனித்த சொத்து சேர்த்தல், இடைத்தரகுகள் இல்லாத நிலைகள் இருந்தால் ஒரு தூய உள்ளாட்சி ஆளுமையைக் காண முடியும். ஆனால் கெட்ட வாய்ப்பாக அப்படி அமையாமல், கட்சி ரீதியாக போட்டிகள், இங்கு பண பலம், ஆள்பலம்,
ஜாதிப் பின்னணி என்றெல்லாம் பார்க்கப்படுவது ஜனநாயகத்தின் தொடக்கத்தையே கெடுப்பதாகவே அமைந்து விடக்கூடும். இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகாவது
தொண்டு மனப்பான்மை, தூயவர்கள் போட்டி என்ற நிலை வரட்டும்.
பெரிய
கட்சிகளின் தோள் ஏறி நின்று...
இப்போது
பல அணிகளாக (8 அணிகளாக) கட்சிகள் தனித்தனியே குறிப்பாக எதிர்க்கட்சி அணிகளில் இருந்தவர்கள் பிரிந்து தனியே நிற்பது ஒரு வகையில் வரவேற்க வேண்டிய நிலைப்பாடே; காரணம் கூட்டணி என்ற வாய்ப்பானால் பெரிய கட்சிகளின் தோள் ஏறி நின்று கொண்டு சிறிய கட்சிகள் பெற்ற வெற்றிக்குப்பின் எங்களால்தான்
அனைத்து வெற்றிகளும் என்று கூறுவதும், பிறகு அதுவே 'பட்டிமன்ற விவாதமாக' மாறுவதற்கும் இடமின்றி எந்த கட்சிக்கு எவ்வளவு பலம் என்று சோதிக்க இது ஒரு 'ஆசிட் டெஸ்ட்' என்ற நல்ல முறையே!
அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க.
கூட்டணி இல்லை. 'நாங்கள் தனியே நிற்கப் போகிறோம்' என்பது வரவேற்கத்தக்கதே. காவிக் கட்சியின் பலம் எவ்வளவு என்பது உலகுக்கு விளங்கி விடும்.
'பணமழை'
பொழிய பஞ்சமில்லை
நோட்டாவைவிடக்
கூடுதல் ஓட்டு வாங்கினால் மகிழ்ச்சியே! பல இடங்களில் நின்று
தோற்பது உறுதி என்றாலும் கூட்டிக் காட்டி, எத்தனை சதவிகிதம் வாக்குகள் என்று கணக்குச் சொல்லவும், ஆள் தேடிப் பிடித்து வேட்பாளர்களாக்கி 'பணமழை' பொழிய பஞ்சமில்லை அவர்களுக்கு என்று பலரும் பேசும் அளவுக்கும் அங்கு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அ.தி.மு.க. நிலையோ முக்கிய
எதிர்க்கட்சியாக வந்துள்ளபோது - சட்டப் பேரவைத் தேர்தலில் வாங்கிய வாக்கு சதவிகிதத்தைக்கூட தக்க வைப்பார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்!
ஆக்கபூர்வ
எதிர்க்கட்சியாக செயல்படவில்லை
ஆக்கபூர்வ
எதிர்க்கட்சியாக செயல்பட அவர்கள் இதுவரை முனையவே இல்லை; காரணம், 'கரையினில் நெருப்பு - நதியினில் வெள்ளம்' என்று பாடிடும் பரிதாப நிலைதான் அக்கட்சிக்கு மிஞ்சியிருக்கிறது.
கூடுதல்
மூட்டையான (Extra Luggage) பா.ஜ.க.வை
தூக்கிச் சுமப்பது இத்தேர்தலில் இல்லை என்றாலும் மற்றபடி கூட்டணி தொடரும் என்று அவசர கதியில் அறிவித்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.
காரணம்
வெளிப்படை, 'மடியில் உள்ள கனம்' - ஒன்றிய அரசின் கருணைப் பார்வைக்காக ஏங்கித் தவிக்கும் நிலையே மிச்சம்.
சிறப்பாக
ஆட்சி சக்கரத்தை சுழல விடுகின்றது
கடந்த
எட்டு மாத தி.மு.க.
ஆட்சி முத்திரை பதித்துள்ளது பல துறைகளிலும்.
கஜானா
காலியாகவே அது பதவியேற்ற நாள்
முதல் இதுவரை உள்ளது. முந்தைய
அரசு வாங்கிய கடன் சுமைகளும், நிதிப் பற்றாக் குறை நுகத்தடியை இந்த அரசின் கழுத்துகள் சுமக்க வேண்டிய நிலை என்றாலும், சீரிய பொருளாதார நிபுணர்களின் வழிகாட்டுதலில், அதனை எதிர் கொண்டு மழை - வெள்ள - புயல் நிவாரண நிதியைக்கூட ஒன்றிய அரசு - மோடி
அரசு இத்தனை மாதங்கள் ஆகியும் தராத கொடுமையான சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு அதனைச் சமாளித்து சிறப்பாக ஆட்சி சக்கரத்தை சுழல விடுகின்றது.
'திராவிட
மாடல்' ஆட்சியின் சிறப்பான சாதனைகளை, ஆய்வாளர்களும், அறிஞர்களும், பிற மாநிலத்தவரும் பாராட்டி இந்தியாவின் முதல் முதலமைச்சராக மு.க. ஸ்டாலினைப்
பார்க்கின்றனர்.
'கடிதோச்சி
மெல்' எறியும் அணுகுமுறை அவருடைய அணுகுமுறை.
உள்ளாட்சியை
நல்லாட்சியாகத் தொடர தமிழ் நாட்டு மக்கள் தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் வரும் 19ஆம் தேதி அன்று நடைபெறும் தேர்தலில் பேராதரவு தரும் வகையில் வாக்களிப்பது, ஊர் நலம் பெருக பெரிதும் உதவிடும்.
சமூகநீதி
ஆட்சி எமது ஆட்சி
எட்டாண்டுகள் - பத்தாண்டுகளில்
எட்ட முடியாத சாதனைகளை எட்டு மாதங்களில் எட்டிய பிறகே இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களை சந்திக்கிறார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர். வரலாறு
படைத்து வரும் நம் முதலமைச்சரின் ஆட்சியை மேலும் வலுப்படுத்த இத்தேர்தலை ஒரு நல்லவாய்ப்பாகக் கொண்டு வாக்களிக்க வேண்டும். வாக்குறுதிகளை செயல் மலர்களாக்கும் பொருளாதார
நீதி அடங்கிய சமூகநீதி ஆட்சி எமது ஆட்சி - 'அனைவருக்கும் அனைத்தும்' என்ற கோட்பாடுதான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு - அது
ஊராட்சியிலிருந்தே தொடங்க இந்த வாய்ப்பை நழுவ விடாமல் ஆட்சியைப் பலப்படுத்தி, உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர ஆளும் தி.மு.க.
கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது - ஜனநாயகம் - மக்களாட்சி மேலும் வலுப்படுத்திட கிடைத்துள்ள வாய்ப்பு - நழுவ விடாதீர்!
தி.மு.க. தலைமையில்
நடைபெறும் இவ்வாட்சி கட்சி ஆட்சி அல்ல; மக்களாட்சி, மறவாதீர்!
வாக்களிப்பீர்
தி.மு.க. கூட்டணிக்கே!!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
6.2.2022
No comments:
Post a Comment