புதுடில்லி, பிப்.3 18 வயது வரையிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மாநிலங் களுக்கு ஒன்றிய அரசு திடீர் உத்தரவு ஒன்றை பிறப் பித்துளளது.
நமது நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை 15 முதல் 18 வயது வரையிலான இளம்பருவத் தினருக்கு செலுத்துகிற பணியானது கடந்த மாதம் 3-ந் தேதி தொடங்கியது. இந்தப் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை இந்த வயதினரில் 63 சதவீதத்தினர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு விட்டனர்.
இது தொடர்பாக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதே சங்களுக்கும் திடீர் அறிவுரை வழங்கி ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
* 15 முதல் 18 வயது வரையிலானவர்களுகு கரோனா தடுப்பூசிகளை சரியான நேரத்தில் செலுத்தி முடிப்பது மற்றும் அவர்களின் தடுப்பூசி நம்பிக்கையை நிலை நிறுத்துவது குறித்து அவர்களையும், அவர்களை பராமரிப் பவர்களையும் மய்யமாகக்கொண்ட ஒரு பொருத்தமான தகவல் தொடர்பு உத்தியை உருவாக்க வேண்டும்.
* கரோனா தடுப்பூசி அட்டவணையை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பது முக்கியம்.
* இளம்பருவத்தினரிடையே இரண்டாவது டோஸ் தடுப் பூசி செலுத்துவதை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அதே நேரத்தில் முதல் டோஸ் தடுப்பூசியை எஞ்சிய பயனாளிகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுடன் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
* இளம்பருவத்தினரிடையே 2-ஆவது டோஸ் தடுப்பூசி போடுவதை தினசரி மாநில அளவிலும், யூனியன் பிரதேச அளவிலும், மாவட்ட அளவிலும் மதிப்பாய்வு செய்வது அவசியம் ஆகும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட் டுள்ளது.
பாகிஸ்தானுக்கு புதிய தலைமை நீதிபதி
இசுலாமாபாத், பிப். 3- பாகிஸ்தானின் 28ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி உமர் அதா பண்டியல் பொறுப் பேற்றுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னி லையில் நீதிபதி உமர் அதா பண்டியலுக்கு பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிப் அல்வி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் விழாவில் ராணுவ உயர் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தலைமை நீதிபதியாக பதவியில் இருந்த நீதிபதி குல்சார் அகமதுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் புதிய தலைமை நீதிபதியாக உமர் அதா பண்டியல் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய பட்ஜெட் மீது
நாடாளுமன்றத்தில் 11 மணி நேரம் மட்டுமே விவாதத்துக்கு அனுமதி
புதுடில்லி, பிப். 3- ஒன்றிய நிதிநிலை அறிக்கை மீது நாடாளு மன்றத்தில் 11 மணி நேரம் மட்டுமே விவாதத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 1ஆம் தேதி) ஒன்றிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வரி இல்லாத இந்த நிதி அறிக் கையில் மக்கள் வாழ்வாதரத்தை உயர்த்துவதற்கான எந்த வொரு திட்டமும் இல்லை 90 நிமிடத்தில் ஜீரோ நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முடித்துவிட்டார் நிதியமைச் சர் நிர்மலா சீத்தராமன்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீது 12 மணி நேரமும், நிதிநிலை அறிக்கை மீது 11 மணி நேரமும் விவாதம் நடத்த, மாநிலங்களவை அலு வலக ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில், குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, 7ஆம் தேதி வரை விவாதம் நடக்கிறது. 7ஆம் தேதி மக்களவையிலும், 8ஆம் தேதி மாநிலங்களவையிலும், விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசுகிறார். இரு சபைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் 8ஆம் தேதி துவங்கி, 11ஆம் தேதி வரை நடக்கிறது. 11ஆம் தேதி, நிதியமைச்சர் விவாதத்துக்கு பதில் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment