சென்னை, பிப்.2 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்று (1.2.2022) புதிதாக 16,096 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய (1.2.2022) கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 30 ஆயிரத்து 651 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 16 ஆயிரத்து 096 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 2,348 பேரும், கோவையில் 1,897 பேரும், செங்கல்பட்டில் 1,308 பேரும், திருப்பூரில் 1,297 பேரும், ஈரோட்டில் 924 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 18 லட்சத்து 85 ஆயிரத்து 324 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 33 லட்சத்து 61 ஆயிரத்து 316 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய (1.2.2022) நிலவரப்படி 1 லட்சத்து 88 ஆயிரத்து 599 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 35 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 599 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
இத்தொற்று பாதிப்பில் இருந்து இன்று 25 ஆயிரத்து 592 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரையில் 31 லட்சத்து 35 ஆயிரத்து 118 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment