ரஷ்யாவில் தொடர்ந்து உயரும் கரோனா: புதிதாக 1,41,883 பேருக்கு தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

ரஷ்யாவில் தொடர்ந்து உயரும் கரோனா: புதிதாக 1,41,883 பேருக்கு தொற்று

மாஸ்கோ, பிப்.4 ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,41,883 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தி யாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

இதுவரை உலக அளவில் 38.27 கோடிக்கும் அதிகமானோர் கரோனா வைரசால் பாதிக்கப்பட் டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 57.08 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள் ளனர்.

கரோனாவால் அதிகம் பாதிக் கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6ஆவது இடத்தில் உள்ளது. அங்கு கரோனா வைரஸ் மற்றும் ஓமைக் ரான் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் தினமும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டு சுகா தாரத்துறை  வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,41,883 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,21,28,796 ஆக உயர்ந் துள்ளது.

கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் மேலும் 678 பேர் உயிரி ழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 690 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1,03,37,008 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 14,59,098 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment