தமிழ்நாட்டில் குறைந்தது கரோனா பாதிப்பு: புதிதாக 14,013 பேருக்கு தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 3, 2022

தமிழ்நாட்டில் குறைந்தது கரோனா பாதிப்பு: புதிதாக 14,013 பேருக்கு தொற்று

சென்னை, பிப்.3 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,013 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று (2.2.2022) புதிதாக 1 லட்சத்து 31 ஆயிரத்து 258 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14 ஆயிரத்து 013 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னை யில் 2,054 பேரும், கோவையில் 1,696 பேரும், செங்கல்பட்டில் 1,198 பேரும், திருப்பூரில் 1,159 பேரும், ஈரோட்டில் 813 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 20 லட்சத்து 16 ஆயிரத்து 582 பேருக்கு பரிசோதனை செய்யப் பட்டு, 33 லட்சத்து 75 ஆயிரத்து 329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவ ரப்படி 1 லட்சத்து 77 ஆயிரத்து 999 பேர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 37 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 636 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

இத்தொற்று பாதிப்பில் இருந்து இன்று 24 ஆயிரத்து 576 பேர்டிஸ்சார்ஜ்செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 31 லட்சத்து 59 ஆயிரத்து 694 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நாளை முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி

சென்னை, பிப்.3 வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நாளை முதல் பார்வையா ளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக, கடந்த ஒருமாதமாக சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 1 முதல் அனுமதி அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. ,

இதனிடையே கரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 17ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நாளை முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை யையும் மாநகராட்சி தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment