சென்னையில் 1,243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 6, 2022

சென்னையில் 1,243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை, பிப்.6 சென்னையில் 1,243 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவை யாக கண்டறியப்பட்டுள்ளன எனவும், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளதாகவும் தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- சென்னையில் வரும் தேர்த லுக்கு 5 ஆயிரத்து 794 வாக்குச் சாவடி மய்யங்கள் இறுதி செய்யப் பட்டுள்ளன. இதில் 1,061 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனவும், 182 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என மொத்தம் 1,243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை யாக கண்டறியப் பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மய்யங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக காணொலி காட்சி வாயிலாக கண் காணிக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட 200 வார்டு களுக்கான தேர்தலில் 27 ஆயிரத் துக்கும் மேற் பட்ட தேர்தல் பணியா ளர்களை பயன்படுத்தப்பட உள் ளனர். இவர் களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பில் சிலர் பங்கேற்க வில்லை. அவர்களுக்கு  சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து வரும் 10ஆம்தேதி 2ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதி களை பொறுத்தவரை வேட்பாளர் கள் ஓட்டு சேகரிக்க வீடுவீடாக செல் லும்போது கூட்டமாக செல்லக் கூடாது. வரும் 11ஆம்தேதி வரை சாலை பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்துவதற்கு தமிழ் நாடு தேர்தல் ஆணையர் அனுமதி அளிக்கவில்லை. எனவே சென் னையில் சாலை பேரணி, பொதுக் கூட்டம் நடத்தவும் அனுமதி இல்லை. சென்னையில் உள்ளரங்கு களில் மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும். அதுவும் 100 பேருக்கு மிகாமலும் அல்லது உள்ளரங்கின் பங்கேற்கும் எண்ணிக்கையில் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட வேண் டும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 மய்யங்களில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment