ரூ.12,000 கோடி வருவாயினை கடந்த பதிவுத்துறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

ரூ.12,000 கோடி வருவாயினை கடந்த பதிவுத்துறை

சென்னை, பிப்.28  ரூ.12,000 கோடி வருவாயைக் கடந்த பதிவுத்துறைக்கு, தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப் பதிவா ளர்கள் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) ஆகியோருக்கான 2022ஆம் ஆண்டுக்கான ஜனவரி மாத பணி சீராய்வு கூட்டம் கடந்த பிப்.25ஆம் தேதியன்று, காலை சென்னை நந்தனத்தில் அமைந் துள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இச்சீராய்வு கூட்டத்தில் ரூ.12,000 கோடி வருவாயை பதிவுத்துறை கடந்துள்ளதற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டுகளை தெரிவித்தார்.

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் வருவாய் ரூ.931.03 கோடி ஈட்டப்பட்டுள்ளது; இது சென்ற நிதியாண்டில் (2021) ஜனவரி மாத வருவாயை காட்டிலும் ரூ.34.32 கோடி அதிகமாகும். 2021-20-22 நிதி யாண்டில் ஜனவரி 2022 முடிய வருவாய் ரூ.10785.44 கோடி ஈட்டப் பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிப்.25ஆம் தேதி முடிய வருவாய் ரூ.1217 கோடி என்ற நிலையில் 25.02.2022 அன்று வரை ரூ.12003. கோடி வருவாயாக பதிவுத் துறையில் ஈட்டப்பட்டுள் ளது.

அனைத்து துணைப் பதிவுத் துறை தலைவர்கள் மற்றும் மாவட் டப் பதிவாளர்கள் (நிர்வாகம்) ஆகியோர் பதிவுத்துறைக்கு நிர்ண யிக்கப்பட்ட இலக்கினை எவ்வித கசிவுமின்றி வசூலிக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித் துணை ஆட்சியர் (முத்திரை) ஆகி யோரும் தங்களுக்கு அனுப்பப்படும் குறைவு முத்திரைத் தீர்வைக்கான முன்மொழிவுகள் மீது உரிய களப்பணி மேற்கொண்டு நியாய மான முறையில் சட்டபூர்வமாக செயல்பட்டு உரிய மதிப்பினை உட னுக்குடன் வழங்க வேண்டு மெனவும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment