சென்னை, பிப்.10 தமிழ்நாட்டில் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் ரூ.336 கோடி செலவில் 114 பாலங்களுக்கான கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள அர சாணை வெளியிடப் பட்டுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2020-2021-ஆம் ஆண்டில் ரூ.353.93 கோடி செலவில் 106 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள 198.6 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவது, 121 பால கட்டுமானப்பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு நபார்டு திட்டத்தின் கீழ் முன்மொழிவு அனுப்பப்பட்டது.
அந்த திட்டம் 2020-2021-ஆம் ஆண்டில் பரிசீலிக்கப்படவில்லை. இதுதொடர்பாக கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த முன்மொழிவு, நிதித்துறை வழியாக நபார்டு வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
114 பாலங்கள்
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நபார்டு வங்கியின் துணைப் பொதுமேலாளர் எழுதிய கடிதத்தில், 121 பாலங்களை கட்டுவதற்காக ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.229.96 கோடி அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 7 பாலங்கள் கட்டுமானப் பணி கைவிடப்பட்டது. மேலும், மீதமுள்ள 114 பாலங்களை கட்டுவதற்கான திருத்திய மதிப்பீட்டை கணக்கிடும்போது, 2021-2022-ஆம் ஆண்டுக்கான நபார்டு திட்டம் மூலம் ரூ.336.70 கோடியாக உயர்த்தி வழங்கி அரசு உத்தரவிட வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை அரசு ஏற்று, அதற்கான ஆணையை பிறப்பிக்கிறது.
இந்த திட்டப்படி, காஞ்சிபுரம் மாவட்டம் பி.எஸ். சாலையில் இருந்து தண்டலம் வரை; சிறுபிணையூர்-வடபாதி சாலையில்; காந்தூர் மேட்டுத்தெருவில்; எஸ்.எஸ்.சாலையில் இருந்து எரையூர் சாலை வரை;
திருவள்ளூர் மாவட்டம் அமுதூர்மேடு முதல் ராமாபுரம் சாலை வரை கூவம் ஆற்றின் குறுக்கே; காரனோடை முதல் சீமவரம் சாலை வரை கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே;
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூரில் வி.என்.சாலை முதல் மாவதி சாலை வரை பாலங்கள் கட்டும் பணியும்;
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூரில் சேவூர் முதல் செம்பூர் சாலை வரையும்; முள்ளி முதல் டி.டி.சாலை வரையும் பாலம் மறுகட்டமைப்பு பணிகளும் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க
20 பேருக்கு மட்டும் அனுமதி
சென்னை, பிப்.10 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி வேட்பாளர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.90 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்யக்கூடாது. செலவீன கணக்குகளை தேர்தல் முடிந்த 30 நாட்களில் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர்களோ, அவரது முகவர்களோ, கட்சி தொண்டர்களோ உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லக்கூடாது.
இதைப்போல் ரூ.10 ஆயிரம் மதிப்பிற்கு அதிக மாகவும் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது. வீடு வீடாக வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற் கொள்ளும்போது 20 பேருக்கு மேல் கூட்டம் இருக்க கூடாது. பிரச்சாரத்தில் அச்சிடப்பட்ட
அறிவிப்புகளை பயன்படுத்தலாம்.
அரங்கத்தின் மொத்த இருக்கையில் 50 சதவீதம் பேர் கொண்டும், பொது வெளியில் 30 சதவீதம் பேர் கொண்டும் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். பிரச்சார கூட்டம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்த மட்டுமே அனுமதிக்கப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் 136 இடங்கள் திறந்த வெளி பொதுக் கூட்டம் நடத்தக்கூடிய பகுதிகளாக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளது. இந்த இடங்களை இணையதளத்தில் வேட்பாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வாகனங்களின் விவரங்களை உதவி தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். வேட்பாளர் அல்லது முகவர்களுக்கு ஒரு வாகனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது கரோனா விதி முறைகளை வேட்பாளர் மற்றும் அவருடன் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டும். வேட்பாளர்கள் அச்சிடப்பட்ட அறிவிப்புகளை வழங்கும்போது கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணியவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், அங்கீகரிக்கப்படாத கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கை 15 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வாக்குப்பதிவு நடைபெறுவதை நேரடியாக பார்வையிடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment