சென்னை, பிப். 1- தமிழ்நாட் டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருத்தப் பட்ட புதிய அட்டவ ணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19-இல் தொடங்க இருந்த நிலையில், கரோனா மூன் றாம் அலை பரவலால் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, கரோனா பரவல் குறைந்ததைய டுத்து இன்று (1.2.2022) முதல் பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், 10 மற் றும் 12ஆம் வகுப்பு மாண வர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான அட்டவ ணையை மாற்றி தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி,
பத்தாம் வகுப்பிற்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9-15 வரை நடைபெறுகிறது.
2-ஆம் கட்ட திருப் புதல் தேர்வு மார்ச் 28- ஏப்.4 வரை நடைபெறு கிறது.
பன்னிரெண்டாம் வகுப்பிற்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9-16 வரை நடைபெறுகிறது.
2-ஆம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 -- ஏப்.5 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment