சென்னை, பிப்.28 தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் 26.2.2022 அன்று 480 பேருக்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னை, கோவை போன்ற மாவட்டங்களில் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதன்படி சென்னையில் இதுவரை 7 லட்சத்து 49 ஆயிரத்து 728 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 15 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து தற்போது 1,651 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
இதையடுத்து சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 15 பேர் குணமடைந்துள்ள நிலையில் 99 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 9,602 பேர் உயிரிழந்துள் ளனர். அதாவது 1.21 % பேர் இறந் துள்ளனர். இதையடுத்து தற்போது தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வர்களின் எண்ணிக்கை 0.2% ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையும் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் இதுவரை கரோனா தொற்றினால் 30 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் அதிகம் பேர் பாதிக்கப் பட்டுள் ளனர்.
அதன்படி 9 வயதுடைய 2.74%, 10 வயது முதல் 19 வயதுடைய 7.90%, 20 வயது முதல் 29 வயதுடைய 19.81%, 30 வயது முதல் 39 வயதுடைய 21.71%, 40 வயது முதல் 49 வயதுடைய 12.54%, 50 வயது முதல் 59 வயதுடைய 13.80%, 60 வயது முதல் 69 வயதுடைய 10.64%, 70 வயது முதல் 79 வயதுடைய 7.59%, 80 வயதுக்கு மேற்ப்பட்ட 3.27% பேர் தொற்றி னால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் ஆண்கள் 53.530 சதவீதம், பெண்கள் 46.470 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment