தஞ்சாவூர், கும்பகோணம் கழக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
தஞ்சாவூர், ஜன.2 தஞ்சாவூர் கும்பகோணம் கழக மாவட் டங்களின் பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட் டம் 19.12.2021 அன்று மாலை 5.30 மணியளவில், தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் நடை பெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில பகுத் தறிவு ஆசிரியர் அணி தலைவர் வா.தமிழ்பிரபாகரன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். பகுத்தறி வாளர் கழக மாநில துணைத் தலைவர் கோபு.பழனி வேல், மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் சி.ரமேஷ், தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருண கிரி, ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப் பாளர் இரா.சிவகுமார் கலந்து கொண்டு தொடக்க உரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி. மோகன், பகுத்தறிவாளர் கழக ஊடகத் துறை மாநிலத்தலைவர் மா.அழ கிரிசாமி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றி னார்.
இக்கூட்டத்தில் நிறைவேற் றப் பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் 1: தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளினை "சமூக நீதி நாள்" என்று அறிவித்து அரசு நிறுவ னங்கள் அனைத்திலும் சிறப் பான உறுதிமொழியை ஏற்க செய்த தமிழ்நாடு அரசிற்கும், மேலும் தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவித்ததோடு அதனை ஒலிப்பேழையில் இசைக்காமல் பயிற்சி பெற்ற வர்களை வைத்து பாட வேண்டும் என்று அறிவித் தது, அதேபோல் இனிவரும் காலங்களில் initial என்ற முன் னெழுத்தினை தமிழில் தான் எழுத வேண்டும் என்று அர சாணை வெளியிட்டுள்ள தமிழ் நாடு அரசுக்கும், முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டா லின் அவர்களுக்கும் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் பாராட் டுக்களையும் வாழ்த்துக்களையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2: வருகிற 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில மாநாட்டை நடத்தும் வகையில் தேதி யினை வழங்கு மாறு தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களை இக்கலந்துரை யாடல் கூட்டத்தின் மூலம் கேட்டுக் கொள் கிறோம்.
தீர்மானம் 3: மராட்டியம், கருநாடகம், போன்று தமிழ் நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டங்களை இயற்றிட வேண்டும் என தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களை இக்கூட் டம் வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறது.
தீர்மானம் 4: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் "மதவிடுப்பு (RL)" என்ற விடுப் பினை பகுத்தறிவாளர்கள் பயன் படுத்த முடியாமல் உள்ளது. எனவே அவ்விடுப்பினை பகுத் தறிவாளர்களும் பயன்படுத்தும் வகையில் சிறப்பு விடுப்பாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள் கிறது.
தீர்மானம் 5: மண்டலம், மாவட்டம், ஒன்றியம் வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அனைத்து நிலையிலும் கலந்து ரையாடல் கூட்டங்களை நடத்தி சிறப்பாக செயல்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 6: பள்ளிக் கல்லூரி களில் அறிவியல் மனப்பான் மையை வளர்க்கும் வகையிலும், மூட நம்பிக்கையினை முறியடிக் கும் வகையிலும் பள்ளி கல்லூரி களில் மந்திரமா? தந்திரமா? போன்ற அறிவியல் நிகழ்ச்சி களை நடத்துவது என தீர்மா னிக்கப் படுகிறது.
இக்கூட்டத்தில் நியமிக்கப் பட்ட புதிய பொறுப்பாளர்கள்
தஞ்சாவூர் மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி தலைவர் ந.சங்கர்,
தஞ்சாவூர் மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி செயலா ளர் இள.மாதவன்,
தஞ்சாவூர் மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி அமைப் பாளர் கு.குட்டிமணி,
குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் விஜயபாலன்,
குடந்தை கழக மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி செய லாளர் அய்யப்பன்,
குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் வலங்கை அபி மன்.
கலந்துகொண்டவர்கள்
திராவிடர் கழக மாநில இளைஞரணி துணை செயலா ளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சாவூர் பேராசிரியர் ந.எழிலர சன், குட்டி மணி, திராவிடர் கழக மாநகர செயலாளர் கரந் தை டேவிட், ஆசிரியர் ந.சங்கர் மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment