சிறுகதை - "கரும்போ கரும்பு" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

சிறுகதை - "கரும்போ கரும்பு"

- ஈரோடு .தமிழ்க்குமரன்

"கரும்பு என்னப்பா விலை?"  என்றாள் சுதா. "ஜோடி 100 ரூபாய்" கரும்புக் கடைக்காரர் பதில்.  "என்னப்பா ஜோடி 80 ரூபாய்க்கு எங்கள் வீட்டு பக்கத்தில் வீட்டுக்காரம்மா வாங்கி கொண்டு வந் தார்கள்"  என்று கடைக்காரரை மடக் கினாள்  சுதா. கடைக்காரன் முறைத்து பார்த்து விட்டுச்  சொன்னான் "ஜோடி 100 ரூபாய், வேண்டும் என்றால் எடுங்கள்  இல்லை என்றால் இடத்தைக் காலி செய்யுங்கள்"  என்றான் கடைக்காரன். அந்தக் கடையிலிருந்து நகர்ந்தாள் சுதா.

தைப் பொங்கலுக்கு கரும்பு வாங்க வேண்டும் என்று கடை வீதிக்கு வந்து கரும்பு விலை கேட்டால். நம்ம வீட்டு அருகில் இருக்கும் கடையின் விலைதான்!  இங்கிருந்து சுமந்து கொண்டு போகும் வேலை கொஞ்சம் மிச்சம் என்று மனதுக்குள் நினைத்தாள் சுதா. அடுத்த கரும்புக் கடைக்கு வந்து மீண்டும் விசாரித்தால்  "கரும்பு என்னப்பா விலை".          "ஜோடி 100 ரூபாய்" கடைக்காரன் பதில்! என்னது,  எல்லா கடையிலும் சொல்லி வைத்து வியாபாரம் செய்கிறார்களோ?  என்று அங்கு இருந்து நகர்ந்தாள் சுதா. சுதா குடும்பத்தில்  கணவர்,  இரண்டு ஆண் குழந்தைகள், நடுத்தர குடும்பம் தான். சரி வீட்டுக்காரர் வாங்கி கொண்டு வருவார் என்று வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

சுதா வீட்டுக்கு வந்ததும் மூத்த மகன் பிரபு கேட்டான். "கடைவீதிக்குப் போய் தம்பிக்கும் எனக்கும் என்ன வாங்கி வந்தாய்?" சுதா பதில்; "வீட்டுக்குத் தேவை யான மளிகைப்  பொருட்கள் வாங்கி வந்தேன். நீ கேட்ட கரும்பு விலை அதிகம் என்று வாங்கி வரவில்லை" என்று சொல்லி முடிப்பதற்குள். இளைய மகன் பாலு கையில் வெளிநாட்டு குளிர் பானத்தை 80 ரூபாய் கொடுத்து வாங்கி வந்தான். சுதாவிடம் கொடுத்தான்.

என்னடா இது  "கடையில் நீங்கள் கரும்பு வாங்கி வரவில்லை. அதுக்குத் தான். நாம் தினமும் பொருள் வாங்கும் மளிகை கடையில் கரும்பு தீர்ந்து போய் விட்டது, கரும்பு இல்லை. அதனால் இந்த குளிர்பானம் வாங்கி வந்தேன்" என்றான் பாலு.  அதற்கு சுதா "50 ரூபாய் செலவு செய்வதற்கு எனக்கு மனசு வரல, மூன்றாம் வகுப்பு படிக்கிற உனக்கு எப்படிடா மனசு வந்தது? இரு அப்பா வரட்டும் உனக்கு சூடு வைத்தால் தான் நீ திருந்துவே" என்று தன் இரண்டாவது மகன் பாலுவை கண்டித்தாள் சுதா. அப்போது மூத்த மகன் பிரபு ஓடி வந்து  "அம்மா அம்மா அப்பா வராங்க" என்று குரல் கொடுத்தான்.

சுதாவின் கணவன் பாண்டியன் வீட்டுக்குள் வந்தான். அப்போது பாலு  ஓடிவந்து  "அப்பா என்னை அடிக்காதீங்க" என்று பாலு அப்பாவை அணைத்துக் கொண்டான். அதற்குப் பாண்டியன். "உன்னை அடிக்க மாட்டேன்" என்று பாலுவை வாரி அணைத்துக் கொண்டான் பாண்டியன், சுதாவை பார்த்து முறைத் தான். "இவன் என்ன தப்பு செய்தான்" என்று கேட்டான் பாண்டியன். அதற்கு சுதா  "கடைக்குச் சென்று குளிர்பானம் வாங்கி விட்டு வந்திருக்கிறான்"  பாலு வுக்கு ஆதரவாக பாண்டியன் பேசினான். "சின்ன பையன் தெரியாமல் செய்திருப் பான்" சுதாவை பார்த்து "நம்ம  பிள்ளை களுக்கு. பொங்கலுக்கு கரும்பு வாங்கி வரவில்லையா?" என்று கேட்டான்.

"கரும்பு விலை அதிகமாக இருக்கு"  என்ன வருடத்திற்கு ஒருநாள் மட்டும் தானே விலை அதிகமாக இருந்தால் என்ன வாங்கி வர வேண்டியதுதானே? நான் போய்  கரும்பு வாங்கி வருகிறேன்"   என்றான் பாண்டியன். கடைவீதிக்கு சென்றான். அதே கரும்பு கடைக்கு  "கரும்பு என்ன விலை" என்று கேட்டான் பாண்டியன். கடைக்காரர் முன்னரே பாண்டியனுக்கு  அறிமுகமானவர்  "என்ன பாண்டி கரும்புக் கடையில காலையில உங்க வீட்டுக்காரம்மா விலை கேட்டாங்க - இப்போ நீங்க வந்து விலையை கேட்கிறீர்கள் - கேட்பதோடு சரி வாங்கும் எண்ணம் இல்லையா?" என்று கடைக்காரர் கேட்டார்.

கடைக்காரரை முறைத்தான்  பாண்டி யன்.   "என்ன கடைக்காரரே? முன்னப் பின்ன தெரியாத ஆளுக்கு  விலை சொல் வது போல் எங்களுக்கும் சொல்கிறீர் களா?" என்றான் பாண்டியன். கடைக் காரர் பேசத்தொடங்கினார். "பாண்டி நான் ரோட்டுல  இரண்டு மூங்கில்  கட்டி கரும்பு வியாபாரம் செய்கிறேன். எனக்கு அஞ்சு ரூபாய் பத்து ரூபாய் கிடைத்தால் போதும். எதிரிலேயே இருக்கும் ஜவுளிக் கடை பாரு ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்க்கு பட்டு சேலை வாங்கி அய்யா யிரம் பத்தாயிரம் என்று விற்பனை செய்கிறார்கள் நான் அப்படி அல்ல - வருடத்துக்கு ஒரு முறைதான் விழா வருகிறது.

அதிக லாபம் கிடையாது - என் வயிற்றிற்கு போதுமான அளவு இருந்தால் போதும் என்ற மனப் பக்குவத்துடன் விற்பனை செய்கிறேன். அதுவும்  இந்த விழா சாதாரண விழா அல்ல. தமிழர்களின் வரலாற்று விழா. இதுக்கு கணக்கு பார்க் கலாமா? எந்த  மத நம்பிக்கைக்கும் சொந் தமான விழா அல்ல தமிழர் திருநாள். அந்த திருநாளில் நாம் விவசாயிகளுக்கு செய்யும் உதவி. அவர்கள் வளர்ச்சிக்கு நாம் தான் கரும்பு வாங்க வேண்டும். கரும்பு வாங்கும் விஷயத்தில் கணக்குப் பார்ப்பது சரியா?"  என்று கேள்வி கேட் டான்  கடைக்காரன். பாண்டியன் எதுவும் பேசாமல் கடைக் காரர் சொன்ன விலைக்கு கரும்பை வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட் டான் தமிழர் திருநாள் என்பது இனிப்பு திருநாள் ஆகும். அனை வரும் "கரும்போ கரும்பு" என்று    கொண் டாடுவோம் என்று மனதுக்குள் இனிமை யாக நினைத் தான்  பாண்டியன்.

No comments:

Post a Comment