கம்பாலா, ஜன.12 உலகின் பிற நாடுகளில் எல்லாம் கரோனா பரவல் குறைந்து கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டாலும் உகாண்டா வில் மட்டும் தொடர்ந்து கட்டுப் பாடுகள் நீடித்தன.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கரோனா வைரஸ் பரவல் கண்ட றியப்பட்டது. கரோனா தொற்று வேகமாக உலக நாடுகளில் பரவத் தொடங்கியது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப் பாடுகளை உலக நாடுகள் அமல் படுத்தின.
அந்த வகையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவிலும் ஊரடங்கு கடந்த மார்ச் 20 ஆம் தேதி அமல் படுத்தப்பட்டது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகளும் மூடப் பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், தொற்று பரவல் அதிகரிப்பால் மீண்டும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.
உலகின் பிற நாடுகளில் எல் லாம் கரோனா பரவல் குறைந்து கல்வி நிலையங்கள் திறக்கப்பட் டாலும் உகாண்டா வில் மட்டும் தொடர்ந்து கட்டுப் பாடுகள் நீடித்தன. பள்ளி கள் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்ததால், கிராமப் புற பள்ளி வகுப்புறைகளில் களைகள் வளர்ந்து இருந்தன. மாணவர்கள் பலர் தங்க சுரங்கங்க பணிகளுக்கும் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனால், பள்ளிகள் எப்போது திறக்கும் என பெற்றோர்களும் மாணவர்களும் ஏங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், உகாண்டாவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், மாண வர்கள் உற்சாகத்துடன் பள்ளி களுக்குத் திரும்பினர். கல்வி நிலை யங்கள் திறக்கப்பட்டதால் கடுமை யான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
No comments:
Post a Comment