கோயில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்குவது வரலாற்றுப் பிழை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

கோயில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்குவது வரலாற்றுப் பிழை!

கருநாடகா பா... அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

பெங்களூரு, ஜன. 2 - கருநாட கத்தில் இந்துக் கோவில் கள் அரசின் கட்டுப்பாட் டில் இருந்து விரைவில் விடுவிக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள் ளார். 

இதற்காக, கருநாடக சட்டப்பேரவையின் பட் ஜெட் கூட்டத் தொட ருக்கு முன்னதாகவே சட் டம் கொண்டு வரப்படும் என்றும் பா... செயற் குழு கூட்டத்தில் அவர் பேசியுள்ளார். இந்நிலை யில், “இந்துக் கோவில் களை அரசின் கட்டுப் பாட்டிலிருந்து விலக்கு வது வரலாற்றுப் பிழைஎன்று பா... அரசின் முடிவுக்கு, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலை வர் டி.கே.  சிவகுமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஒரு துறையையோ அல்லது அரசு கோவில் களையோ எப்படி உள் ளூர் மக்களுக்கு நிர்வாகத் திற்காக கொடுக்க முடி யும்? இது  அரசாங்கத்தின் சொத்து. கோவில் கள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் வருகிறது. வேறு சில மாநிலங் களைப் பார்த்து அவர்கள் இந்த அரசியல் நிலைப்பாட்டை எடுக்கப் பார்க்கிறார்கள் என்று டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். கருநாடகத் தில் 34 ஆயிரத்து 563  கோவில்கள், இந்து சமய அறநிலை யத்துறையின் கீழ் உள்ளன. இதில் ஆண் டுக்கு ரூ. 25 லட்சத்திற்கும் அதிக மாக வருவாய் வரக்கூடியபிரி வில் 207 கோவில்கள் உள்ளன. ரூ. 5  லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை வரு வாய் வரும்பிபிரிவில் 139 கோவில்களும், ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக வருவாய் வரும்சிபிரிவில் 34 ஆயி ரத்து 217 கோவில்களும் உள்ளன. இவற்றை அரசிடமிருந்து பிரித்து தங்கள்வசம் கொண்டு வந்துவிட வேண்டும்  என்பதே வி. எச்.பி. உள்ளிட்ட இந்து த்துவா அமைப்புகளின் நீண்டகால விருப்பமாக உள்ளது.

No comments:

Post a Comment