மரக்கன்றுகள் நடும் விழா
தருமபுரி, ஜன. 19- தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் பொங்கலில் திராவிட மாணவர் கழகம் சார்பாக தருமபுரி மாவட்ட கிளை கழக ஊர்களில் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
தருமபுரி திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை மரங் களோடு கொண்டாட வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படை யில், பொதுமக்கள் மற்றும் மாண வர்களுக்கு மரங்கள் வழங்கி மாசு நிறைந்த தீபாவளியை கொண்டா டால், மாசற்ற தமிழரின் பெரு விழாவை கொண்டாட வேண்டும் என்றும், உலக வெப்பமயமாதல் அதன் விளைவுகள் மக்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதற்கான ஒரே தீர்வு மரங்களை அதிகரித்து பசுமை காப்பதே, என்பதை எடுத்துரைத்து, வெங்கட்டசமுத்திரம் பகுதியில் தோழர் சாய்குமார் முன்னிலை யிலும், வசிகவுண்டனூர் பகுதியில் தோழர் பூபதிராஜா, - தமிழரசன் - சக்திவேல் ஆகியோர் முன்னிலை யிலும், தாதனுர் புதூர் பகுதியில் தோழர் பிரதாப் முன்னிலையிலும், வெதரம்பட்டி பகுதியில் தோழர் வினோத் - ராபின்சன் - நிதிஷ்குமார் ஆகியோர் முன்னிலையிலும், பறைய பட்டி பகுதியில் தோழர் ஏழுமலை முன்னிலை வகிக்க, மிட்டாரெட்டி ஹல்லி பகுதியில் தோழர் சாணக் கியன், சச்சின், சஞ்சய், திராவிடன், சதீஸ், சிறீராம், பிரபு, ராஜேஷ் முன் னிலை வகிக்க தருமபுரி மாவட்ட கழக செயலாளர் த.மு.யாழ் திலீபன் ஏற்பாட்டில் ஒரே நாளில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.
மேலும் மரக்கன்றுகள் நடுவது தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு முன் (தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பிறந்தநாளில் 350 பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது குறிப் பிடதக்கது.)
இந்நிகழ்ச்சிகளை இ.சமரசம், மாணவர் கழக மாவட்ட தலைவர் ஒருங்கிணைத்தார்.
No comments:
Post a Comment