புதுடில்லி, ஜன. 19- நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி இந்தியா’, அதன் கார்களின் விலையை 4.3 சதவீதம் அதிகரித்துள் ளதாக அறிவித்துள்ளது.மேலும், இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கார் தயாரிப்புக்கான உள்ளீட்டு பொருட்களின் விலை அதிகரிப்பை சமாளிக்கும் விதமாக, மாடல்களை பொறுத்து 0.1 சதவீதத்திலிருந்து, 4.3 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, டில்லி விற்பனையகம் விலையை பொறுத்த வரை, மாருதி கார்களின் சராசரி விலை உயர்வு 1.7 சதவீதமாக உள்ளது.
மாருதி நிறுவனம், 3.15 லட்சம் ரூபாய் விலை கொண்ட ‘ஆல்டோ’ கார்களி லிருந்து, 12.56 லட்சம் ரூபாய் விலை கொண்ட ‘எஸ் கிராஸ்’ கார்கள் வரை விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனம், கடந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை விலையை அதி கரித்துள்ளது. ஜனவரியில் 1.4 சதவீதம், ஏப்ரலில் 1.6 சதவீதம், செப்டம்பரில் 1.9 சதவீதம் என, மொத்தம் 4.9 சதவீதம் விலையை அதிகரித்துள்ளது.
கார் தயாரிப்புக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான அலு மினியம், உருக்கு, செம்பு, பிளாஸ்டிக் மற்றும் விலைஉயர்ந்த உலோகங்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்து விட்டதால், கடந்த ஆண்டில் பல முறை விலையை அதிகரிக்க வேண்டியதாயிற்று என, இந்நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.இந்நிலையில், தற்போது புத்தாண்டில் மீண்டும் விலையை உயர்த்தி உள்ளது.
No comments:
Post a Comment