தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியீடு
சென்னை, ஜன.19 அலுவலகங் களில் பணிபுரியும் போது முகக் கவசம் அணியாதவர்களை உடன டியாக வெளியேற்ற வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தர விட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தற்போது வேக மெடுத்துள்ளது. தினசரி ஏராள மானோர் பாதிக்கப்பட்டு வருகின் றனர். மற்றொருபுறம் ஒமிக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான வழி காட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள் ளது. அலுவலகங்களில் பணிபுரியும் போது முகக்கவசம் அணியாதவர் களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தனியார் நிறுவ னங்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அறிகுறி உள்ள பணியா ளர்களுக்கு பரிசோதனை மேற் கொள்ள வேண்டும். 300 நபர் களுக்கு மேல் உள்ள தொழிற்சாலை களில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment