பீஜிங், ஜன. 19- உலகப் பொருளாதார மன்றத்தின் ஒரு வார கால இணைய வழி உச்சிமாநாடு 17.1.2022 அன்று தொடங்கியது. இதன் முதல் நாளில் சீன அதிபர் ஜின்பிங் காணொலி காட்சி மூலம் சிறப்புரை நிகழ்த் தினார்.
அப்போது அவர் கரோ னாவை வெல்லும் வழி மற்றும் தடுப்பூசி திட்டங்கள் உள் ளிட்ட பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்தார். இது தொடர் பாக அவர் கூறியதாவது:-
கரோனா தொற்றால் ஒரு நூற்றாண்டில் பார்த்திராத பெரிய மாற்றங்களுக்கு உலகம் தள்ளப்பட்டு இருக்கிறது. தொற்றுநோயை முறியடிப்பது மற்றும் கரோனாவுக்கு பிந் தைய உலகத்தை எவ்வாறு உரு வாக்குவது என்பது உலகெங் கிலும் உள்ள மக்களின் பொது வான கவலையாக உள்ளது.
இந்த பெருந்தொற்றில் இருந்து மனித குலம் நிச்சயம் மீண்டுவரும். கரோனாவை வெல்வதற்கு கூட்டு முயற்சிகள் தான் ஒரே வழி. பன்னாட்டு அளவில் நியாயமான தடுப்பூசி வினியோகம் மற்றும் தடுப்பூசி இயக்கத்தை வேகப்படுத்துவ தும் பெருந்தொற்றில் இருந்து விரைவாக விடுபட வழிவகுக் கும்.
இதைப்போல உலக பொரு ளாதார நடவடிக்கைகளையும் திறந்து, மிகப்பெரிய ஒத்து ழைப்பை அனைத்து நாடுகளும் வழங்க வேண்டும். நாம் சுவர் களை எழுப்பாமல், தடைகளை நிச்சயம் அகற்ற வேண்டும்.
கரோனா பெருந்தொற்று காரணமாக பல வளரும் நாடு கள் மீண்டும் வறுமைக்கு தள்ளப்பட்டு உள்ளன. சில வளர்ந்த நாடுகள் கூட கடின மான சூழலை எதிர்கொண்டு வருகின்றன.
வளர்ந்த நாடுகளுக்கு பொறுப்பான பொருளாதார கொள்கைகள் தேவை. வளரும் நாடுகளின் தாக்கத்தை தவிர்ப் பதற்கு கொள்கைகளின் பரவல் விளைவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
பொருளாதார நடவடிக் கைகளை சீனா தொடர்ந்து விரிவுபடுத்தும். அத்துடன் பொருளாதாரம் மற்றும் சந்தை சீர்திருத்தங்களுக்கும் சீனா உறுதிபூண்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பாக பன்னாட்டு விதிகள் தேவை. மேலும் உலக அளவில் இதுகுறித்த தகவல் பரிமாற்றங்களும் வேண்டும் என்று ஜின்பிங் கூறினார்.
No comments:
Post a Comment