டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
தெலுங்கானா விவசாயிகளுக்கு பயிர் காப்பு திட்டமான ரிது பந்து மூலம் ரூ.50,000 கோடி கே.சி.ஆர்.அரசு செலவிட்டதை அக்கட்சியினர் மாநிலம் முழுவதும் கொண்டாடினர்.
கரையான் வீட்டை அழிப்பது போன்று ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் நாட்டை அழித்து விடும் - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக அகில இந்திய பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு.
சமூக நீதி, மாநில சுயாட்சி இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சபதம்.
தி டெலிகிராப்:
அய்.ஏ.எஸ். அதிகாரிகளை மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல், எந்த மாநிலத்திற்கும் மாற்றம் செய்ய ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் குடிமைப்பணி விதிகளை மோடி அரசு திருத்தியது.
உ.பி. மதுரா மாவட்டம் நாக்லா பேரு கிராமத்தில் இல்லாத சாலையை யோகி அமைச்சரவையின் இரு அமைச்சர்கள் திறந்து வைத்ததாக கல்வெட்டு பதிப்பு - மக்கள் கடும் எதிர்ப்பு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment