எழுச்சியுடன் நடைபெற்ற கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

எழுச்சியுடன் நடைபெற்ற கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்

கல்லக்குறிச்சி, ஜன. 2- 21,12,2021 அன்று மாலை 4 மணிக்கு கல் லக்குறிச்சி மாவட்டம் சார்பில் திராவிடர் கழகம், பகுத்தறிவா ளர் கழகம், திராவிடர் கழக இளைஞர் அணி கலந்துரை யாடல் கூட்டம் கல்லக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வழக்குரைஞர் கோ.சா. பாஸ்கர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் மா.சுப்பராயன் தலைமை வகித்தார். மாநில மருத்துவரணி செயலாளர் மருத் துவர் கோ.சா.குமார், விழுப்புரம் மண்டல கழக செயலாளர் தா.இளம்பரிதி, மண்டல இளை ஞரணி செயலாளர் தம்பி பிர பாகரன், மாவட்ட பகுத்தறிவா ளர் கழகத் தலைவர் வீ.முரு கேசன், மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் .கரிகாலன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

விழுப்புரம் மண்டலம் கழக தலைவர் வழக்குரைஞர் கோ.சா. பாஸ்கர் விடுதலை சந்தா சேகரிப்பு, புதிய கழகப் பொறுப் பாளர்களுக்குப் பாராட்டு, கழ கத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்த்தல் ஆகிய மூன்று பொருள் கள் பற்றி உரையாற்றினார். அவர் தமது உரையில் தந்தை பெரியாரின் அறிவுக்கொடை யால் உலகில் மலர்ந்த ஒரே முழு பகுத்தறிவு நாளேடுவிடுதலையாகும். இந்நாளேடு தொடர்ந்து எதிர்நீச்சலில் களைப்போ, சளைப்போ சிறிதுமின்றி, நீந்தி நீந்தி வெற்றிக் கரையைத் தொடும் பேராயுதம் என்பதே இதன் தனித்தன்மை, தனி வரலாறு! தனிப் பெரும் சாதனையாகும். இன்னார் இனியார் என்று பாராது, துலாக்கோல் சரியான நிலையில் நின்று எடை காட்டு வது போல், நம்மக்களின் உரி மைகளுக்கு விரோதமாகச் செயல்படுபவர்கள் யாவரேயாயினும் அவர்களை கண்டிக்கவும், அதே நேரத்தில் நம்மக்களின் முன்னேற்றத்திற்கும். நலன்களுக் கும் பாடுபடுவோரைப் பாராட் டவும் போற்றவும் தவறாத ஒரே நாளேடு நம்விடுதலைமட்டுமே யாகும். மேலும் நம் இன எதிரி களாக இருந்தாலும் அவர்களி டத்திலும் மனித நேயத்துடன் நடந்து கொள்ளும் நாளேடு நம்விடுதலைமட்டுமேயாகும்.

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், “அறிவியல் மனப் பான்மை  (Scientific temper),  மனிதநேயம்  (Humanism), ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டு ஆராயும் திறன் (Spirit of Enquiry),  சமூக சீர்திருத்தம் (Social reformation)ஆகியவற்றை வளர்ப்பது இன்றியமையாத முக்கிய கடமையாகும்என்று அரசியல் சட்டத்தின் 51 பிரி வின் உட்பிரிவு (எச்) கூறுகின்றது. அவற்றைப் பரப்பும் அன்றாடப் பணியே, தன் உயிர் மூச்சு என்று கருதி நாளும் கருத்துப் பிரச் சாரம் செய்து, வருவாய் இழப்பு பொருளாதாரத்தில் இருந்த போதிலும், அறிவை விருத்தி செய்தல் அகண்டமாக்கும் பணியை செய்து வரும் நாளேடுவிடுதலையாகும். 1935ஆம் ஆண்டு முதல் இன்றளவும், சுய நலமில்லாத் தன்மையோடு சுய மரியாதைப் பணிபுரியும் நாளேடு, விடுதலையைத் தவிர இந்தியா விலோ உலகிலோ வேறு நாளேடு இல்லை என்பதை கண்கூடாகக் காணலாம்


சமூகநீதிக்கும், மக்களின் உரி மைகளுக்காக குரல் கொடுக்கவும் இந்தியாவிலேயே மற்ற நாடு களை விடவிடுதலைதான் முதன் மையாக உள்ளது. இத்தகைய அரும்பெரும் பணியை 60 ஆண்டுகளாக விடுதலையின் ஆசிரியராக தமிழர் தலைவர் செய்து வருகிறார்.

எனக்காக விழாக்கள் வேண் டாம்; சால்வைகள் வேண்டாம்; பாராட்டுக் கூட்டங்கள் வேண் டாம். பதிலாக விடுதலை நாளேட் டிற்கு சந்தா தாருங்கள்; ‘விடு தலைவளர்ச்சிக்கு நன்கொடை தாருங்கள்என்று நம் கழகத் தொண்டர்களிடம் விண்ணப் பித்துக் கொண்டிருக்கிறார் நம் தமிழர் தலைவர் அவர்கள், விடுதலை ஏட்டின் மூலம் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் பகுத்தறிவு பரப்பும் பணியையும் செய்து வருகிறார். அவரின் இலட்சிய பயணம் ஈடேற நம்மா வட்டம் சார்பாக 100 விடுதலை சந்தாக்களைக் கொடுப்போம். அதற்குத் தோழர்கள் ஒவ்வொரு வரும் குறைந்தது இரண்டு சந் தாக்களையாவது தர வேண்டும் என்று கூறி முடித்தார்.

தீர்மானங்கள்

1) விழுப்புரம் மண்டல திரா விடர் கழக மேனாள் தலைவர் .மு.தாஸ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து தீர் மானம் நிறைவேற்றப்படுகிறது.

2) கல்லக்குறிச்சி மாவட்டம் சார்பாக 100 விடுதலை சந் தாக்கள் வரும் மார்ச் 2022க்குள் சேகரித்து வழங்குவதென தீர் மானம் நிறைவேற்றப்படுகிறது.

3) இம்மாவட்டத்தில் ஜன வரி 2022 முதல் ஒவ்வொரு மாதமும் அரங்கக் கூட்டமும், பள்ளி கல்லூரி முன்பு வாயிற் கூட்டங்களும், தெருமுனைக் கூட்டங்களும் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

பாராட்டுத் தீர்மானம்

விழுப்புரம் மண்டல கழகத் தலைவராக வழக்குரைஞர்

கோ.சா.பாஸ்கரையும், கல்லக்குறிச்சி மாவட்டச் செய லாளராக .சுந்தரராசனையும் நியமனம் செய்த தலைமைக் கழ கத்திற்கு நன்றி பாராட்டி தீர் மானம் நிறைவேற்றப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்களை அங்கீகரிக்கும் தீர்மானம்

கல்லக்குறிச்சி நகரத் தலை வராக இரா.முத்துசாமியும், நகர செயலாளராக நா.பெரியாரும், சங்கராபுரம் நகர செயலாளராக அப்துல் கபூரும், திருக்கோவிலூர் ஒன்றிய கழகத் தலைவராக தேவ ரடியார் குப்பம் இளங்கோவனும், ஜம்பை கிளைக்கழகத் தலைவ ராக .தமிழரசனும், கிளைக் கழகச் செயலாளராக வை.சந்திர சேகரும், மாவட்டக் கழகத்தால் நியமனம் செய்ய தலைமைக் கழ கத்திற்கு பரிந்துரைக்கப்படுகி றார்கள். இதற்கு தலைமைக் கழ கம் ஒப்புதல் அளிக்க வேண்டு மென தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.

இக்கலந்துரையாடல் கூட் டத்தில் பொதுக்குழு உறுப்பினர் .பெரியசாமி, மாவட்ட கழக இலக்கிய அணித்தலைவர் தமிழ்ச் செம்மல் புலவர் பெ.சயராமன், விழுப்புரம் மண்டல கழக இளைஞரணிச் செயலாளர் தா.தம்பி பிரபாகரன், திண்டி வனம் மாவட்டத் தலைவர் இர.அன்பழகன்; மாவட்ட அமைப்பாளர் நவா ஏழுமலை, திண்டிவனம் நகர தலைவர் பா.வில்லவன் கோதை, கல்லக் குறிச்சி நகர கழகப் பொருளாளர் இரா.நல்லமுத்து, சங்கராபுரம் ஒன்றிய கழகத் தலைவர் பெ.பால சண்முகம், இரிசிவந்தியம் ஒன் றிய கழகத் தலைவர் அர.பால சண்முகம், மூரார் பாளையம்  கிளைக்கழகத் தலைவர் இரா.செல்வமணி, சங்கராபுரம் ஒன் றிய .. தலைவர் மா.ஏழுமலை, கல்லக்குறிச்சி மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் நா.பெரியார், சங்கராபுரம் அப் துல் கபூர், ஜம்பை .தமிழரசன், வை.சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக நகர செயலாளர் இரா.முத்து சாமி நன்றி கூற கூட்டம் இனிதே நடந்து முடிந்தது.

No comments:

Post a Comment