இந்தியா மீது எலான் மஸ்க் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

இந்தியா மீது எலான் மஸ்க் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜன. 18- இந்தியாவில் தன் நிறுவன தயாரிப்புகளை அறிமுகம் செய்ய, அரசுடன் நிறைய சவால் களை சந்திக்க வேண்டியிருப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.

டெஸ்லா நிறுவனம் அதன் தயாரிப்புகளை, இந்தியாவில் அறி முகம் செய்ய என்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்ற சுட்டுரை வாயிலான கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், அரசுடனான ஏரா ளமான சவால்களுடன் பணி புரிந்து வருவதாக தெரிவித்துள் ளார். கடந்த ஆண்டில், மின்சார காருக்கான இறக்குமதி வரியை குறைக்குமாறு கோரிக்கை வைத் தார் எலான் மஸ்க்.

இதற்கு ஒன்றிய கனரக துறை அமைச்சகம், ‘டெஸ்லா முதலில் இந்தியாவில் கார் தயாரிப்பை துவங்கட்டும். அதன் பின் வரி சலுகைகள் குறித்து பார்க்கலாம்’ என்று தெரிவித்தது.மேலும், எந்த வொரு வாகன நிறுவனத்திற்கும் இதுபோன்ற சலுகைகளை வழங்க வில்லை என்றும், டெஸ்லாவுக்கு வரி சலுகைகளை வழங்குவது, இந் தியாவில் பல கோடி டாலர்களை முதலீடு செய்திருக்கும் மற்ற நிறுவ னங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்து வதாக இருக்கும் என்றும், அர சாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது, முழுமையாக தயா ரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப் படும் கார்களுக்கு, 60 முதல் 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.இந்நிலையில், டெஸ்லா நிறுவனம், அனைத்து வகையான மின்சாரக் கார்களுக் கான இறக்குமதி வரியை, ஒரே அளவாக 40 சதவீதமாக மாற்றும் படி கோரிக்கை வைத்தது. மேலும், இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், இந்திய மின்சார வாகன சூழல் மேம்படும் என்றும்; நிறுவனம் விற்பனை, சேவை, சார் ஜிங் கட்டமைப்பு போன்ற வற்றில் குறிப்பிடத்தக்க அளவில், வெளி நாட்டு நேரடி முதலீட்டை மேற்கொள் ளும் என்றும் தெரிவித்திருந்தது.

டெஸ்லா கடந்த ஆண்டு ஜன வரியில், ‘டெஸ்லா இந்தியா மோட் டார் அண்டு எனர்ஜி’ எனும் நிறுவனத்தை பெங்களூரில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில், எலான் மஸ்க் அரசை குற்றஞ்சாட்டும் விதமாக இப்படி ஒரு பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment