பள்ளிகளில் மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த இந்துத்துவா மதவெறி
புதுடில்லி, ஜன.2- உத்தரப்பிரதேசத்தின் பள்ளி மாணவர்கள் இந்து ராஜ்ஜியத்தின் பேரில் உறுதிமொழி எடுத்த காட்சிப்பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகிறது. அம்மாநில சட்டப் பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், இதுபோன்ற மதவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.
இதில், பாஜக ஆட்சி தொடர வேண்டி இந்துத்துவா அமைப்புகள் பல முயற்சித்து வருகின்றன. இதற்காக அவர் களில் சிலர் மதவாத நடவடிக்கை களில் ஈடுபடுவது அதிகரிப்பது தெரிகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சோன்பத்ராவிலுள்ள விமலா இண்டர் காலேஜ் எனும் தனியார் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இந்து ராஜ்ஜியத்தின் பேரில் கடந்த 28-ஆம் தேதி உறுதிமொழி எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிப் பதிவை அம் மாவட்ட இந்தி செய்தி சேனலின் டிவிட்டர் பதிவில் வெளியாகி வைர லாகி வருகிறது.
Ôஇந்து ராஜ்ஜியம் அமைக்கப் போராடு, எதிர்ப்பவர்களை கொல்ல உயிரையும் தியாகம் செய்’ என அந்த காட்சிப்பதிவில் மாணவர்கள் உறுதி மொழி ஏற்கின்றனர்.
உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவை தேர்தலின் பிரச்சாரமாக பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் பெயர்களை குறிப்பிட்டு பாஜக ஆதரவுப் பிரச்சார மும் அதில் இடம் பெற்றுள்ளன. மதவாதம் பரப்பும் வகையிலான இந்த நடவடிக்கை மீது சோன்பத்ரா பகுதி காவல்துறையினர் இதுவரை எந்த வழக்குகளும் பதிவு செய்யவில்லை.
இது குறித்து விமலா இண்டர் காலேஜின் மேலாளரான ஜிதேந்தர்சிங் கூறும்போது, ‘கல்வி விவாத நிகழ்ச்சிக்கு என உள்ளூரின் செய்தி சேனல் சில மாணவர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்களை எந்த நடவடிக் கைகளில் ஈடுபட வைத்தனர் என எங்க ளுக்கு தெரியாது. பள்ளிக்கு வெளியே நடந்ததால் இதுதொடர்பா புகாரளிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’ எனத் தெரிவித்தார்.
இதேபோன்ற உறுதிமொழி மகா ராட்டிராவின் நாக்பூரில் எடுக்கப்பட்ட காட்சிப் பதிவும் சோன்பத்ராவின் செய்தி அலைவரிசை டிவிட்டர் பக்கத் தில் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு டில்லியில் ஒரு பொது இடத்தில் எடுக்கப்பட்ட உறுதிமொழி காட்சிப் பதிவு, டிசம்பர் 19 அன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. சமீப நாட்களாக இதுபோன்ற நிகழ் வுகள் அதிகரிப்பதன் பின்னணியில் உ.பி. சட்டப்பேரவை தேர்தலும் ஒரு காரணம் எனக் கருதப்படுகிறது.
இதில், பாஜகவின் வெற்றிக்காக மதவாதப் பேச்சுக்களால் இந்துக்களின் வாக்குகளை கவரும் முயற்சிகளில் பல்வேறு தரப்பினரால் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன் அரித்துவா ரில் நடைபெற்ற சாமியார்கள் மாநாட் டில், முஸ்லிம்களை கொல்ல வேண்டும்’ என்ற மதவெறிப் பேச்சு வெளியானது.
இதில், இந்துவாக மதம்மாறிய ஷியா முஸ்லீம் தலைவரான வசீம் ரிஜ்வீ உள்ளிட்ட 3 பேர் மீது நீதிமன்ற உத்தர வின் பேரில் உத்தராகண்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment