கருத்து தெறிக்கும் நெருப்பு எரிமலையே!
இறந்தும்
நன்மக்கள் மூளைக்குள் நிலைத்து
இருக்கும் அறிவுச்சோலையே!
சூடு சுரணையற்ற
மூடர்களால்
உன்
சிலைகளை மட்டுமே
சிதைக்க முடியும்!
உலகமயமாகிக் கொண்டிருக்கும்
நின்
சித்தாந்தங்களைச்
சிதைக்க எவரால் முடியும்?
ஓங்குக நின் புகழ்!
- வி. இளவரசி சங்கர்
மாநில துணைப் பொதுச்செயலாளர்,
பகுத்தறிவாளர் கழகம்,
புதுச்சேரி
No comments:
Post a Comment