கோவை வெள்ளலூரில் பெரியார் சிலையை அவமதித்த காலிகள் தமிழ்நாடெங்கும் கொந்தளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 12, 2022

கோவை வெள்ளலூரில் பெரியார் சிலையை அவமதித்த காலிகள் தமிழ்நாடெங்கும் கொந்தளிப்பு

ஈரோடு,ஜன.12- கோவை வெள்ளலூர் பெரியார் சிலைக்கு காவிச் சாயம், செருப்பு மாலை போட்ட கயவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.-

ஈரோடு

கோவையில் தந்தை பெரியார் சிலையை அவமதித்த காலிகளை கண்டித்தும், அவர்களை கைது செய்யக் கோரியும் ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் 10-1-2022 அன்று காலை 11:00 மணிக்கு திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே.காமராஜ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், ஆதி தமிழர் பேரவை, கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கம், திராவிடர் பேரவை, தலித் விடுதலை இயக்கம், தமிழ்நாடு திராவிட தமிழர் கட்சி, அம்பேத்கர் பெரியார் படிப்பகம் வட்டம் உள்ளிட்ட இயக்க தோழர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்புச்செயலாளர் ஈரோடு .சண்முகம், பேராசிரியர் .காளிமுத்து, கோ.பால கிருஷ்ணன், இரா.நற்குணன், .சத்தியமூர்த்தி, கோ.திரு நாவுக்கரசு, பெரியார் படிப்பக வாசகர் வட்டத் தலைவர் பி.என்.எம்.பெரியசாமி, மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெபராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் .தமிழ்ச் செல்வன், பெருந்துறை ஒன்றிய கழக தலைவர் விஜயமங்கலம் .சசிதரண், இளைஞரணி பெருந்துறை ஒன்றிய தலைவர் நா.மோகன்ராஜ், கோவை மண்டல கழக இளைஞரணி மேனாள் செயலாளர் வெள்ளக்கோவில் .மணிகண்டன், மகளிரணி மண்டல தலைவர் இராஜேஸ்வரி, கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்க நிலவன், திராவிடர் பேரவை நிறுவனத் தலைவர் மாசிலாமணி அம்மையார், ஆதி தமிழர் பேரவை மாநில நிதிச் செயலாளர் பெருமாவளவன், தலைமை நிலையச் செயலாளர் வீரவேந்தன், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் நா.பழனிச்சாமி, தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன்.சுந்தரம், அம்பேத்கர் பெரியார் படிப்பக வட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சவுந்தர், தமிழ்நாடு திரா விட தமிழர் கட்சி மாவட்ட தலைவர் செ.கோபிநாத்,மாவட்ட செயலாளர் மா.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

செந்துறை

கோவை வெள்ளலூரில் தந்தை பெரியார் சிலையை அவமதித்த காலிகளை கண்டித்தும் கடும் நடவடிக்கை கோரியும் செந்துறையில் திராவிடர் கழகம் மற்றும் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் 11.1..2022 செவ்வாய் காலை பத்து முப்பது மணி அளவில் செந்துறை தந்தை பெரியார் சிலை எதிரில் திராவிடர் கழகம் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் திரள் ஆர்ப்பாட்டமாக சிறப்பாக நடை பெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் மண்டல செயலாளர் கோ.மணி வண்ணன் மண்டல இளைஞரணி செயலாளர் பொன் செந்தில் மாவட்ட அமைப்பாளர் ரத்தின ராமச்சந்திரன் சங்கர் முத்தமிழ்ச் செல்வன் சோ.கா. சேகர் இளவரசன் தமிழரசன் சீ கருப்புசாமி இளவழகன் ராச செல்வகுமார் ரகுபதி ஆகியோரும் திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் செந்துறை ஊராட்சி தலைவர் செல்ல கடம்பன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கருப்புசாமி காங்கிரஸ் சார்பில் ராஜேந்திரன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் சாமிநாதன் திருவள்ளுவர் ஞானம் என்ற இராவணன் மற்றும் பல தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தந்தை பெரியார் சிலையை இனியும் சேதப்படுத்தினாலோ அவமரியாதை செய்தாலோ கண்டதும் சுட உத்தரவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.

பொள்ளாச்சி

கோவை பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டித்து கழக பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் தி.பரமசிவம் தலைமையில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட செயலாளர் செந்தில் நாதன், மாவட்ட துணை தலைவர் சி.மாரிமுத்து, திராவிடர் தொழிலாளர் அணித் தலைவர் ஆனந்த்சாமி, பொள்ளாச்சி நகர திராவிடர் கழகத் தலைவர் வீரமலை, நகரச் செயலாளர் நாகராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், ஆலம்பாளையம் ரவிச்சந்திரன், மாணவர் கழகப் பொறுப் பாளர் திவ்யவாசுகி, மற்றும் செழியன், வேட்டைக்காரன்புதூர் முருகானந்தம், மற்றும் திராவிட முன்னேற்றக் கழக மாநில ஆதிதிராவிடர் நலத் துணைத் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, ராமநாதபுரம் திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஆறுச்சாமி, விடுதலை சிறுத்தைகள் மேனாள் செய்தி தொடர்பாளர் காதர், ஆதித்தமிழர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் ராசக்காபாளையம் மாரிமுத்து, பொள்ளாச்சி விடுதலை சிறுத்தைகள்கட்சி உமர்அப்துல்லா. திராவிட இயக்கத் தமிழர் பேரவை வழக்குரைஞர் பிரபாகரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புலியகுளம்

வெள்ளலூர் பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து கோவை மாநகர் புலியகுளம் பகுதியில் திராவிடர் கழகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புவனகிரி

கோவை அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப் பட்டதைக் கண்டித்து - சிதம்பரம் மாவட்டம் புவனகிரியில் 10.1.2022 திங்கள் மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் - மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. பிஜேபி, ஆர்எஸ்எஸ் மதவாத கும்பலைக் கண்டித்து முழக்கம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணிச் செயலர் யாழ்.திலீபன், மாவட்ட துணைத் தவைர் கோபி.பெரியார்தாசன், திருமுட்டம் ஒன்றிய தலைவர் பெரியண்ணசாமி, புவனகிரி இராமதாசு, புவனகிரி ஆசீர்வாதம், மாவட்ட .. செயலர் கோ.நெடுமாறன், தொழிற்சங்க அமைப்பாளர் ஆறுமுகம், இளைஞரணி செயலர் சிற்பி சிலம்பரசன், காங்கிரஸ் கட்சி சார்பில் மோகன்தாஸ், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் நகர செயலர் ஸ்டாலின், மணவாளன், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலர் சுப்பிரமணியன், தமிழக வாழ்வுரிமை கட்சி முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த முல்லை மாறன், சதீஸ்பிரசாத், பிரவீன், யாழ் செங்குட்டுவன், மெய்யழகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

வெள்ளலூர்

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியார் முழு உருவ சிலை அவமரியாதையை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளலூரில் நடை பெற்றது.

மாவட்ட தலைவர் .சந்திரசேகர், தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் திக செந்தில்நாதன், மாவட்ட அமைப் பாளர் மு.தமிழ்செல்வன், மாவட்ட துணை செயலாளர் திக காளிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் .பிரபாகரன், மண்டல செயலாளர் .சிற்றரசு, மண்டல மாணவர் கழக செயலாளர் மு.ராகுல், மாநகர செயலாளர் புலியகுளம் .வீரமணி, மாவட்ட துணை தலைவர் சி.மாரிமுத்து, தமிழ் முரசு, மாநகர அமைப்பாளர் மே.பா.ரங்கசாமி ,பழ அன்பரசு, வெள்ள லூர் நகர திக ஆறுச்சாமி, சுந்தர்ராஜன், பொன்ராஜ், சுரேந்தர், பெரியார் மணி, திருநாவுக்கரசு, ஜெயந்த் ,இலைகடை செல்வம், ரவிக்குமார், அர்ச்சுனன், குமரேசன்,மற்றும் மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, திலகவதி , கவிதா, திமுக சார்பில் தலைமை கழக பேச்சாளர் பகுத்தறிவு இலக்கிய அணி சிங்கை பிரபாகரன், கிழக்கு மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் குட்டி சன்முகசுந்தரம்,

திமுக ராமநாதன்,மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சி சார்பில் மாநில விவசாய சங்க தலைவர் வி.பி.இளங்கோவன், திரா விடர் தமிழர் கட்சி சார்பில் தெற்கு மாவட்ட அமைப்பாளர் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிங்கை சட்ட மன்ற துணை செயலாளர் அக்கீம், இருகூர் மூன்றாவது டிவிசன் தினேஷ், திமுகவை சேர்ந்த பொறியாளர் சுந்தர் ராஜன், கார்த் திக்கேயன், ஜெகதீசன், ராஜ் () ராஜேந்தி ரன், சுகுமார், எம் ஜி ராமச்சந்திரன், காராத்தேமதன், பிரேம்குமார், மற்றும் பாவாணர் படிப்பகம் சிவராம் மற்றும் சமூக விழிப் புணர்வு இயக்க தலைவர் வழக் குரைஞர் சாக்ரடீஸ், உள் ளிட்ட ஏராளமா னோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தருமபுரி

தருமபுரி பெரியார் சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் கழக தலைவர் மு.பரமசிவம் தலைமை தாங்கினார். கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் ஆர்ப்பாட்டத்தை முழக்கமிட்டு தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் .யாழ்திலீபன், மாவட்ட மாணவர் கழக தலைவர் .சமரசம்,மண்டல திராவிடர் கழகத் தலைவர் .தமிழ்ச்செல்வன், மேனாள் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி பொதுக்குழு உறுப்பினர்

. மாதன், மாவட்ட துணைத் தலைவர் இரா.வேட்ராயன், மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர்

இர. கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் .சின்னராஜ், கடத்தூர் வாசகர் வட்டத் தலைவர் கோ.தனசேகரன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சி.காமராஜ், செயலாளர் பெ.கோவிந்தராஜ், பகுத்தறிவாளர் முனி. ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் "கண்டிக்கிறோம் கண்டிக்கி றோம் பெரியார் சிலையை சேதப்படுத்திய மதவாதிகளை கண்டிக்கின்றோம்!‌." "தமிழக அரசே, தமிழக அரசே பெரியார் சிலையை சேதப்படுத்திய கயவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்!" "காவல்துறையே - காவல்துறையே தலைவர்க ளின் சிலையை சேதப்படுத்தும் வன்முறையாளர்களை குண் டர் சட்டத்தில் கைது செய்!" என முழக்கமிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் தேவேந்திரன், சாய்குமார், நாச்சியப்பன், மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் கு.சரவணன், கா.காரல் மார்க்ஸ், வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன், ஆசிரியர் சுந்தரம், நகர அமைப்பாளர் கா.ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பள்ளிப்பாளையம் (நாமக்கல்)

பள்ளிப்பாளையத்தில் ஜனவரி 11 அன்று மாலையில் கோவை வெள்ளலூரில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பு செய்த  கயவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பெரிய சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குமார், பள்ளிப்பாளையம் நகர செயலாளர் காமராஜ், குமாரபாளையம் நகர தலைவர் சரவணன்,மாவட்ட துணைச் செயலாளர் பொன்னுசாமி,ஈஸ்வரன் திராவிடர் மாணவர் கழகம் பிரபாகரன், மற்றும் பள்ளிப்பாளையம் நகரதிமுக அவைத்தலைவர் குலோப்ஜான்,நெடுஞ்செழியன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாணிக்கம், சரவணன், லோக் ஜனசக்தி அமைப்பை சார்ந்த  ஆதவன்,ஆதித்தமிழர் பேரவை சார் பில் கவுதம் தினேஷ், சங்கர், சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் கார்த்திகேயன் ஆகியோர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர்.பள்ளிபாளையம் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் சீனிவாசன் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment