நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில்
தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்திப்பு
புதுடில்லி, ஜன.18- நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக் கட் சித் தலைவர்கள் நேற்று (17.1.2022) மாலை ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித்ஷாவைச் சந்தித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட ‘நீட்’ தேர்வுகுறித்த முடிவுகள் அடங்கிய மனுவை அளித்து, தமிழ் நாடு வெள்ளச் சேதத்திற்கான நிவா ரண உதவிகளையும் உடனடியாக வழங்கிடவேண்டும் என்றும் வலியுறுத் தினர்.
இச்சந்திப்புக்குப் பின் தி.மு.க. நாடா ளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்றிணைந்து தலை மைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அந்தக் கலந்துரையாடலில் எடுத்த முடிவிற்கிணங்க இன்றைக்கு (17.1.2022) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தோம். இங்கே இருக் கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அ.தி.மு.க. நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் ஜெயக்குமார், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடராஜன், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பா.ம.க. தலை வர் கோ.க.மணி ஆகிய அனைத்து கட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப் பினர்களும் சந்தித்து கலந்துரையாடி தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், கட்சித் தலைவர்களும் எடுத்த முடிவிற் கிணங்க உள்துறை அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்துள் ளோம்.
உள்துறை அமைச்சர் உறுதிமொழி!
கோரிக்கை மனுவில் ‘நீட்’விலக்கு உடனடியாக செய்யப்படவேண்டும்’ என்று தலைவர்கள் எடுத்த முடிவிற் கிணங்க அந்த கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதனை மய்யமாக வைத்து ஏற்கெனவே இது போன்ற ‘நீட்’ விலக்கு தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. 3.3.2007 அன்று குடியரசுத்தலைவர் ஒப்புதலை கொடுத்து இருக்கிறார். அப்போது இருந்த சட்டம் 3/2007 அடிப்படையில் அதே போன்று நீங்கள் நீட் விலக்குஅளிக்கலாம் என்ற கருத்துரைகளையும் வழங்கி இருக்கிறோம். இந்த பிரச்சினை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர், கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை கலந்து பேசி முடிவெடுப்பதாகக் கூறி இருக்கிறார். அதில் என்ன முடிவெடுத்துள்ளோம் என்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் தெரிவிப்பதாக உள்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக நமக்கு கிடைக்க வேண்டிய வெள்ளச் சேத நிவாரணம் குறித்து தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த மூன்று கோரிக்கை மனு அடிப்படையில் ரூபாய் 6230.45 கோடி அளிக்க வேண்டும் என்று கொடுத்த கோரிக்கை மனு -அந்தக் கோரிக்கை மனு அடிப்படையில் நிச்சய மாக ஜனவரி 31-க்குள் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியை அனுப்பி வைப்பேன் என்று உள்துறை அமைச்சர் உறுதி கூறி இருக்கிறார்.
உள்துறை அமைச்சரைச் சந்தித்த பிறகு எங்களுக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
-இவ்வாறு நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment