சென்னை, ஜன. 2- புத் தாண்டு தினத்தையொட்டி, ம.தி. மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ம.தி.மு.க. தொலை நோக்கு பார்வையுடன் எடுத்த அரசியல் நிலைப் பாட்டை, தமிழ்நாடு மக் கள் சட்டமன்ற தேர்த லில் அங்கீகரித்து உள்ள னர். தமிழ்நாடு மக்களின் பேராதரவுடன் மலர்ந்த தி.மு.க. ஆட்சி 7 மாத காலத்தில் பலத்த நம் பிக்கையை பெற்றுள்ளது. இந்தியாவிலேயே தலை சிறந்த முதலமைச்சர் என்று பாராட்டப்படு கிறார்.
பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான சக்தியாக எதிர்க்கட்சிகள் திரள வேண்டும். அப்போது தான், பா.ஜ.க.வை நாம் எதிர்த்து முறியடிக்க முடியும். இதில், நான் திருமாவளவனின் கருத்தை ஆமோதிக்கிறேன். தமிழ்நாடு காவல்துறையினர் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான வர்கள் என்ற பெயரும் புகழும் உண்டு. ஆனால் 7 படை, 9 படை அமைத் தும் இன்னும் கூட மேனாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டுபிடிக்க முடிய வில்லை என்பது காவல் துறைக்கு பெருமை அளிப்பதல்ல.
வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டின் நன்மைக் காகவும், ஈழத் தமிழர்க ளுக்காகவும், உல கத்தமி ழர்களுக்காகவும் போரா டுகிற வாழ்க்கை நடத் தினார் வைகோ என்ற பெயரை நிலைநாட்டு வேன். அதுவே எனக்குப் போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது துணை பொதுச்செயலா ளர் மல்லை சத்யா, கொள்கை விளக்க அணி செயலாளர் ஆவந்தியத் தேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment