ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்

 நிபுணர்கள் எச்சரிக்கைசிங்கப்பூர், ஜன. 18- சிங்கப்பூரில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி அங்கு 692 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் 541 பேருக்கு உள்நாட்டி லேயே ஒமைக்ரான் வைரஸ் பரவியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக் காவில் பரவியதை போல சிங்கப்பூரில் ஒமைக்ரான் வகை தொற்றுப் பரவல் அதிகரிக்க கூடும் என்று தொற்று நோயியல் நிபு ணர் அலெக்ஸ் குக் எச்ச ரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சிங்கப்பூரில் தினசரி ஒமைக்ரான் பாதிப்பு 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை விரைவில் அதிகரிக்க வாய்ப்பு உள் ளது. சிங்கப்பூரில் எந்த வகையான கட்டுப்பாடு கள் கடைப் பிடிக்கப்படு கின்றன என்பதைப் பொறுத்து ஒமைக்ரான் அலையின் தீவிரம் இருக் கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனாலும் சிங்கப்பூ ரில் கடுமையான கட்டுப் பாடுகள் அமலில் உள்ள தால் அய்ரோப்பா மற் றும் வட அமெரிக்க நாடு களை விட சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பர வல் வேகம் மெதுவாகவே இருக்கும் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சிங்கப்பூரில் மக்கள் தொகை 60 லட்சம் ஆகும். இதில் 90 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். ஒவ் வொரு 10 பேரில் 5 பேர் பூஸ்டர் தவணை தடுப் பூசி போட்டு உள்ளனர். ஆனாலும் அங்கு ஒமைக் ரான் வகை தொற்று அதிகரித்து வருவது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment