சென்னை, ஜன. 18- இந்தியா வின் முன்னணி ஏற்றுமதி டிராக்டர் பிராண்டான சோனாலிகா டிராக் டர்ஸ் நிறுவனம், 2021-ஆம் நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களிலேயே ஒரு லட்சத்துக்கும் அதிக மான டிராக்டர்களை விற்பனை செய்து 2022-ஆம் ஆண்டில் புதிய சாதனை புரிந்துள்ளது.
நிறுவன செயல்பாடு குறித்து இந்நிறுவன செயல் இயக்குநர் ரமன் மிட்டல் கூறுகையில், “விவசாயிகளுடன் நேரடி யான அணுகுமுறையால் அவர்களது தேவையை உணர்ந்து தயாரிப்புகளை தொடர்ந்து நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் காரணமாகவே சாதனை அளவாக 1,05,250 டிராக் டர்கள் 9 மாதங்களில் (ஏப்ரல்-டிசம்பர்-2021) விற்பனையாகியுள்ளன.
மேலும் ஏற்றுமதியில் எப்போதுமே முதலிடம் வகிக்கும் இந்திய பிராண் டாக திகழ்வதை பெரு மையுடன் குறிப்பிட்டாக வேண்டும். 2021--2022 நிதி ஆண்டில் 25,000 டிராக் டர்களை ஏற்றுமதி செய்து புதிய சாதனை எட்டப்பட்டுள்ளது. நிதி ஆண்டு முடிய இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் புதிய பய ணத்தை 2022இ-ல் நிறுவ னம் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டில் சரியான டிராக்டர்கள், மிக உயர் தரத்தில் மிகச் சிறப்பான குழுவினரால் தயாரிக்கப்பட்டு வேளாண் மக்கள் வளம் பெற வழி வகுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது” என்றார்.
No comments:
Post a Comment