பொதுமக்கள் பணத்தை தேர்தல் பிரச்சாரங்கள் நடத்தி பாஜக வீணடிக்கிறது மாயாவதி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

பொதுமக்கள் பணத்தை தேர்தல் பிரச்சாரங்கள் நடத்தி பாஜக வீணடிக்கிறது மாயாவதி குற்றச்சாட்டு

லக்னோ, ஜன.2 பொதுமக் கள் பணத்தை தேர்தல் பிரச்சாரங்கள் நடத்தி பாஜக வீணடிக்கிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிர தேச சட்டப் பேரவை வரும் மார்ச் மாதம் தேர் தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக் கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல் பல்வேறு தரப்பி னர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இந்த சட்டப் பேர வைத் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஅய்எம்அய்எம் உள் ளிட்ட பல்வேறு கட்சி கள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன் னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட் சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. 

இந்நிலையில், பொதுக் கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் பணத்தை பாஜக வீணடிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற் றஞ்சாட்டி யுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக் கல் நாட்டு கிறோம் என்ற பெயரில் பாஜக மற்றும் காங்கிரஸ் தேர்தல் கூட் டங்களை கூட் டுகின்றன.  இது போன்ற கூட்டங்க ளில் ஈவு இரக்கமின்றி பொதுமக்களின் பணம் வீணாக்கப்படுகிறதே தவிர பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் பணம் வீணாக்கப்படுவதில்லை என்றார்.

No comments:

Post a Comment