சட்டப்படிப்பில் இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

சட்டப்படிப்பில் இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாதா?

விதிகளை மீறும் தேசிய சட்டப் பல்கலைக்கழகம்

சென்னை, ஜன. 18- நாடு முழுவதும் உள்ள 15 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில்  இளநிலை மற்றும் முது நிலைக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கையில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.

இந்த கல்வி ஆண்டில் இளநிலை சட்டப்படிப்பில் 1,308 மாணவர்கள், முதுநிலை சட்டப்படிப்பில் 425 மாண வர்கள் சேர்க்கை உள்ளது.

தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் இடஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டவர் களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக மூத்த வழக்குரைஞர் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் ஆகியோர் உரிய துறை அமைச்சர்களிடம் கடிதம் வாயிலாக வலியுறுத்தப் பட்ட நிலையில், மாணவர்கள் சேர்க்கையில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு அளிப்பதற்கான எவ்வித செயல்பாடும் முன்னெடுக்கவில்லை.

2019ஆம் ஆண்டில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, இளநிலை மற்றும் முதுநிலை சட்டக்கல்வியில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு  மாணவர்கள் சேர்க்கையில்  27 விழுக் காடு கடைப்பிடிக்க வேண்டும் என்று தேசிய சட்டப்பல் கலைக்கழகத்துக்கு உத்தரவைப் பிறப்பித்தது.

ஆனாலும் அந்த உத்தரவை தேசிய சட்டப்பல் கலைக்கழகம் கடைப்பிடிக்கவில்லை.

2006ஆம் ஆண்டு சிஇஅய் சட்டத்தின்படி(CEI Act, 2006) பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தேசிய சட்டப்பல்கலைக்கழகத் தால் புறந்தள்ளப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் இடஒதுக்கீடு கொள்கையை தேசிய சட்டப் பல்கலைக் கழகம் விதிமீறியுள்ளது.

மாநில அரசின் நிதியில் இயங்கும் பல்கலைக்கழகங் களில் இடஒதுக்கீட்டுக்கொள்கையை கடைப்பிடிக்காத நிர்வாகத்தின்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

- கோ.கருணாநிதி,

பொதுச்செயலாளர்,

அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment