தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் (14.01.2022) மாலை 5.00 மணிக்கு கள்ளப்பெரம்பூரில் திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டம் மன்னர் சரபோஜி கல்லூரி கழக மாணவர் ம.பொன்னரசு இல்லத்தில் உற்சாகம் பொங்க நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையேற்றார். மாவட்ட கழக துணைச்செயலாளர் ச.சந்துரு, மன்னர் சரபோஜி கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் சே.ஆகாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அறிவாசான் தந்தை பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 69% விழுக்காடு இடஒதுக்கீடு பெற்று தந்த சிறப்பினையும் மாணவர்கள் மத்தியில் விளக்கமாக உரையாற்றினார். விரைவில் பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் நூலகம் அமைப்பதெனவும், கழகப்பொதுக்கூட்டம் நடத்துவதெனவும் முடிவுசெய்யப்பட்டது. கலந்து கொண்ட மாணவர்கள் தங்களை திராவிட மாணவர் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment