பஞ்சாப் அரசு அமிர்தசரசைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையருக்கு மின்சாரத் துறையில் பணி வழங்கி உள்ளது.
உலகில் பல அதிசயங்கள் உள்ளன. அவற்றில் கருவிலேயே உடல்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களும் ஒன்றாகும். இவ்வாறு நிகழ்வது மிகவும் அரிதான ஒன்றாகும். சுமார் 50,000 அல்லது லட்சத்தில் ஒரு சில பிறப்புகள் மட்டுமே இவ்வாறு நிகழலாம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறப்பவர்களில் வெகுநாள்கள் உயிருடன் பிழைத்திருப்போர் வெகு சிலரே ஆவார்கள்.
அவ்வாறு அமிர்தசரசைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் சோனா - மோனா என்பவர்கள் ஆவார்கள். இவர்களை பிங்கல்வாரா தொண்டு நிறுவனம் வளர்த்தெடுத்துள்ளது. இவர்கள் மின் துறையில் தங்கள் பட்டயப்படிப்பை முடித்துள்ளனர். இவர்களுக்குப் பஞ்சாப் மாநில அரசுப் பணி வழங்கி உள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் இவர்களுக்குப் பஞ்சாப் அரசு சண்டிகரில் உள்ள துணை மின் நிலையத்தில் ரெகுலர் டி மேட்டாக பணி வழங்கி உள்ளது. இவர்கள் இங்குள்ள மின் சாதனங்களை நன்கு இயக்கி வருகின்றனர். இருவருக்கும் பஞ்சாப் அரசு தலா ரூ.20,000 மாத ஊதியம் வழங்க உள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த 20ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளனர். இதில் சோனா என்பவர் கருவிகளைக் கையாண்டு வருகிறார். மோனா என்பவர் அவருக்கு உதவி வருகிறார். இவர்களுக்கு ஏற்கெ னவே பணி புரிந்த அனுபவமும் உள்ளது. இவர்கள் பஞ்சாப் அரசுக்கும், தங்களை வளர்த்த பிங்கல்வாரா தொண்டு நிறுவனத் துக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment