தந்தை பெரியாரின் 48ஆவது நினைவு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் வினோத், சாந்தலட்சுமி மற்றும் ஆர்த்தி ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்தனர். திராவிடர் கழக மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். பரிசுப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்த கழகத் தோழர் வினோத்துக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. அய்ம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றனர்.
No comments:
Post a Comment