பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத் தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இணைந்து நடத்தும் பெரியாரியல் பயிற்சி வகுப்பு [சிறப்பு நோக்கு: [பகுத்தறிவு] - 10ஆம் நாள் பயிற்சி வகுப்பு - பெரியாரியல் பயிற்சி பட்டறை பத்தாம் நாள் வகுப்பு 21.12.2021 செவ்வாய் மாலை 7.00 மணிக்கு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் கூட்டம் தொடக் கத்தை அறிவிக்க நிகழ்ச்சி தொடங்கியது.
மாநில துணைத் தலைவர் அ.தா.சண்முகசுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தி, இன்றைய வகுப்பின் பயிற்றுநர் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசனை பயிற்சி யாளர்களுக்கு அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
7.10 க்கு தனது வகுப்பை தொடங்கிய கருத்தாளர் இந்த பயிற்சி பட்டறையில் கொடுக்கப்பட்ட 10 நாட்களுக்கான தலைப்புகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், ஜோதிடம், ஜாதகம், ஜாதி என்பதாக உள்ளது. சோதிடம் என்றோ ஜாதி என்றோ இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அது போலவே ஆத்மா என்று உள்ளது. ஆன்மா என்று இல்லை. நம்மிடம் எந்த சொல்லை வைத்து மூடநம்பிக்கையை பரப்புகிறார்கள் என்பதன் அடிப்படையிலேயே இந்த வகுப்புகள் இருக்க வேண்டும் என்பதாக அமைக்கப்பட்டது.
இந்த தலைப்புக்கு முன் பெரியார் யார், அவருடைய புரட்சி என்ன என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். அது ஆயுதம் தாங்கிய புரட்சியா என்றால் இல்லை. பெரியார் புரட்சி அமைதி வழி புரட்சி. அறிவை கருவியாக பயன் படுத்தி புரட்சி கண்டார். உலகில் எங்கும் இது மாதிரியான புரட்சி நடைபெறவில்லை என்பதை குறிப்பிட்டார்.
மனித இனம் உலகம் முழுவதும் உள்ளது. உலகம் முழுவதும் பாகுபாடுகள் கூட இருக்கின்றன. ஆனால் இந்த மண்ணின் பாகுபாடு வித்தியாசமானது. பிறவியின் அடிப் படையிலான பாகுபாடு. பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடு என்பதை உணரவேண்டும் என்றார்.
யார் யாருக்கு பிறப்பது என்பதை பிறப்பவன் முடிவு செய்வதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் ஏற்படுத்திய பாகுபாடு என்று சொன்னால் நீடிக்காது என்பதால், கடவுளின் ஆணை என நம்பவைத்து வரு கிறார்கள். கடவுள் இட்ட ஆணையாக சமூகத்தின் அடித் தளத்தில் உள்ளவர்கள் சமூக அடிமைத்தனத்தோடு வாழ் வதுதான் மகிழ்ச்சி என கொண்டாடும் சூழ்நிலையை உண் டாக்கினார்கள். இந்த நிலை உலகில் வேறு எங்கும் கிடையாது.
இந்த நிலையை எதிர்த்து தான் பெரியார் போராடினார். இந்த கொடுமையை எதிர்த்து தான் பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக...
இந்தக் கொடுமை இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைக்க செய்யப்பட்டது. இதை அறிவு வழியில், அறிவியல் வழியில் சென்று தான் ஒழிக்க முடியும். சுயமரியாதை, பகுத்தறிவு போன்ற எளிதில் புரியும்படியான கொள்கைகளை முன்வைத்து அறிவை ஆயுதமாக்கி வெற்றி பெறவேண்டும் என பெரியார் போராடினார்.
இல்லாத கடவுளைத்தான் இந்த நிலைக்கு காரணப்படுத் தும் போது அதையே எதிர்க்கத் தொடங்கினார் பெரியார். சிக்கல்களுக்கு காரணம் கடவுள் தத்துவம் தான். எனவே கடவுள் மறுப்பை முன்னெடுக்கிறார். வெளிநாடுகளிலும் கடவுள் மறுப்பை முன்னெடுத்து இருக்கிறார்கள். ஆனால் அங்கு உள்ள வேறுபாடுகள் வேறு என்பதை விளக்கினார்.
கடவுள் மறுப்பு
தனது கொள்கைக்கு தனது கடவுள் மறுப்பு என்ற கடவுள் எதிர்ப்பு கொள்கைக்கு திரிபுவாதம் வரக்கூடாது என்பதற்காகவே கடவுள் இல்லை என்பதையே முழக்கமாக அறிவித்தார். கடவுள் இல்லை என்ற புத்தரை கடவுளாக்கி அழித்துவிட்டார்கள் என்பதை பதிவு செய்தார்.
கடவுள் மறுப்பு முழக்கத்தோடு அவர் விட்டுவிட வில்லை. இன்னும் தொடர்புடைய சிலவற்றையும் மறுத்தார். கடவுள் நம்பிக்கை அந்த பிறவியை சார்ந்து முடிந்துவிடும். ஆத்மா மறு பிறவியை நம்ப வைத்து அடுத்த பிறவியில் உனக்கு இதெல்லாம் நடக்கும் என்ற பயத்தை ஏற்படுத் தினார்கள்.
ஆத்மா என்பதை வரலாற்றில் எப்படி திணிக்கப்பட்டது என்று பார்த்தோமேயானால்,
உயிரினங்கள் பிறப்பு தோன்றி.... வளர்ச்சி பேச்சு, குரல். குரங்கு மனிதன் குழுவாக திரிந்த காலம் உணர்ச்சியற்ற சிந்தனை இல்லாத காலம் என்பதைப் பற்றியெல்லாம் விவரித்தார் கருத்தாளர்.
ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலில் உள்ளது பற்றி கூறினார்.
இயல்பாக நடப்பது கூட அச்சம். தன்னை மீறியதாக பிரமிப்பாக வழிபாடு செய்யக் கூடியதாக மாற்றினார்கள்.
ஓரளவு நாகரீகம் வளர்ந்த பின் உடன் இருப்பவர்கள் மரணித்தல் அன்பு, பாசம் தோன்றுதல், இறக்கும்போது எரிப்பு, புதைப்பு இதைப் பற்றியெல்லாம் தெளிவாகக் கூறினார்கள். அய்யாவுக்கு வழங்கிய யுனெஸ்கோ விருது பற்றி கூறினார்கள். சாக்ரடீஸ் அவர்களையும் தாண்டி சிந் தித்தவர் பெரியார். அதையும் தாண்டி சிந்தித்ததை துணிச் சலாக செயல்படுத்திக் காட்டினார் பெரியார். சாக்ரடீஸ் கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஆனால் பகுத்தறியும் ஆற்றல் உள்ளவர். ஆனால் அவருக்குப் பின் வந்த பிளாட்டோ ஆத்மாவும் பகுத்தறிவும் ஒன்று தான் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்
அவருக்குப் பின் வந்த அரிஸ்டாட்டில் மனிதர்களுக்கு ஆத்மா இருப்பதைப் போல் செடி கொடிகளுக்கும் ஆத்மா உண்டு என்றார். மனிதனுக்கு பகுத்தறிவு உண்டு. ஆனால் செடிகொடிகளுக்கு பகுத்தறிவு இல்லை என்றார்.
இப்படிப்பட்ட சூழலில் தான் மதங்கள் வருகிறது. இதே கருத்தை மதங்கள் எளிமைப்படுத்தி சொல்கின்றன. மனி தனின் ஆன்மா இறந்தபின் கடவுளிடம் சென்று விடுகிறது. ஆன்மா எங்கு செல்கிறது? மோட்சத்திற்கு செல்கிறது என்ற கருத்தை திணித்தார்கள்.
மக்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையை விட்டு விட்டு மதக் கருத்துக்கு ஆட்பட்டு மதகுருமார்கள் திணிக்கும் மூட மத நம்பிக்கையான ஆத்மா பற்றிய கருத்துகளை ஏற்று கொள்ளும் நிலைக்கு ஆட்படுத்தினார்கள்.
ஆதிக்க சக்திகள் எப்படி வாழ்ந்தால் அடுத்த பிறவியில் உயர்நிலையை அடையலாம் என பொய்யாக சொல்லியும், இந்த பிறவியில் இப்படி நடந்தால் அடுத்த பிறவியில் நரகத்துக்கு செல்வாய் என்றும் நரகம் எப்படிப்பட்டது என்பதை எல்லாம் பொய்யாகச் சொல்லி, அந்த நரகம் பற்றியும் சொர்க்கம் பற்றியும் கூறி பொய்யாக நம்பவைத்து இது கடவுளுக்கு கட்டுப்பட்டது என்ற சூழலை உருவாக்கி நம்பவைத்தார்கள்.
பய உணர்ச்சியால் ஆத்மாவை நம்ப வைத்தார்கள். ஆதிக்க சக்திகள், பார்ப்பனர்கள் உழைக்கும் மக்களை தந்திரமாக அடிமைப்படுத்தி விட்டார்கள்.
இதைப் போக்க சீர்திருத்தவாதிகள் முயற்சித்தார்கள்.
பெரியார் இந்த சமுதாயத்தைப் புரட்டிப் போட்டால் தான் விடுதலை கிடைக்கும் என கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு என்பதை பற்றியெல்லாம் கேள்வி கேட்டவர்.
அறிவியல் அறிவு வளர வளர ஆத்மா நம்பிக்கை குறையத் தொடங்கியது. நமது நாட்டில் அறிவியலையும் மதமாக்கிப் பார்க்கும் எண்ணம் உள்ளது. ஆத்மா உண்மையானால் அடுத்த பிறவி என்பது மனிதப்பிறவி யா என்பதை சொல்ல முடியாது என்றார்.
கோபர்நிகஸ், கலிலீயோ, சார்லஸ் டார்வின் பற்றி கூறினார்.
எந்த மதபீடம் கேள்வி கேட்டவர்களுக்கு தண்டனை வழங்கியதோ அதே மத பீடங்கள் பின்னாளில் அக்கருத்தை ஏற்றுக்கொண்டது மேலைநாடுகளில் என்பதை கூறினார்.
சர். சி. வி.ராமன் மதக் கோட்பாட்டுக்கு ஆட்பட்டதால் தான் மனிதன் விண்வெளி சென்ற போது இந்த பூத உடலுடன் மனிதன் கடவுள் உலகில் பிரவேசிக்க கூடாது என்கிற அளவுக்கு மத நம்பிக்கை அறிவியலாளர்களிடமும் இருந்தது.
இன்றைக்கு குளோனிங் என்பது அறிவியலின் வளர்ச்சி. ஒரு உயிரிலிருந்து இன்னொரு உயிரினத்தை உருவாக்கு கின்ற அந்த முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. இது ஆத்மா விற்கு எதிரானது அல்லவா?
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆன்மாவுக்கு எதிரானது அல்லவா? இருதய மாற்று அறுவை சிகிச்சை ஆன்மாவுக்கு எதிரானது அல்லவா?
ஆத்மா மனிதன் இறந்த பின்பு பிரிந்து செல்வது என்ற கருத்து எப்படி எடுபடும் ? ஒரு உடலில் இருந்து ஒரு உறுப்பை எடுத்து விட்டு அவன் இறந்த பிறகு இந்த உறுப்பு இன்னொரு உடலில் செயல்படும் போது ஆத்மா எங்கே ? அதன் நிலை என்ன? என்பது பற்றி கூறினார்.
கடவுள் மறுப்பு இந்த பிறப்பை பற்றியது. ஆத்மா அடுத்த பிறவி அடுத்த பிறப்பை பற்றியது. மோட்சம் , நரகம்,என்பது பற்றிய பயம் காட்டி அடுத்த பிறப்பு என்று ஒன்று இருப்பதாகக் கூறி பயத்தை ஏற்படுத்தி நம்ப வைக்கிறார்கள்.
எனவே அன்பிற்குரிய தோழர்களே பிரச்சாரம் செய்யும் போது கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு என்பதை தீவிரமாக செய்ய வேண்டும். பய உணர்ச்சி, ஆத்மா பற்றிய பயம் எல்லாம் இல்லை என்பதை விளக்க வேண்டும்.
கல்வி கற்றவரிடம் கூட ஆத்மா பற்றிய பயம் உள்ளது. அறிவியல் அறிவுள்ளவர்களிடம் அறிவியல் மனப்பான்மை இல்லை. எனவே கற்றவர்கள், அறிவியல் படித்தவர்கள் கூட அறிவியல் மனப்பான்மையின்றி மூடநம்பிக்கையில் இருக்கிறார்கள் என்பது பற்றி கூறினார்.
அடிப்படையில் அனைத்து மக்களும் நாத்திகர்களாகத் தான் பிறக்கிறார்கள். வளர வளர பய உணர்ச்சி மற்றும் பல்வேறு உணர்ச்சிகளை திணித்து கடவுள், ஆத்மா பயத்தை ஏற்படுத்துகிறார்கள் ஆதிக்கவாதிகள்.
எனவே தோழர்களே எல்லோரும் மூடநம்பிக்கையை எதிர்த்து போராடவேண்டும். அறிவியல் வழி நின்று அய்யாவின் மூட நம்பிக்கை இல்லா உலகம் படைக்க வேண்டும்.
நிறைய படியுங்கள். ஆராய்ந்து பாருங்கள். சிந்தித்து முடிவெடுங்கள் எனக் கூறி முடித்தார்.
கேள்வி பதில் நிகழ்ச்சியில், பயிற்சியாளர் காவேரி சைவக் குரவர்கள், ஆழ்வார்கள் பாசுரம் இதில் ஆத்மா பற்றி கூறுகிறார்கள் என்பது பற்றி வினா எழுப்பினார்.
அதற்கு தமிழ் பக்தி இலக்கியத்தைப் பற்றி தெளிவாக சொல்லி, புரியும் மொழியில் ஆதிக்கம் செலுத்துவது என்பது ஒரு வகையில் மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்துவது. எனவே அதை பயன்படுத்தினார்கள் என்பதை தெளிவாக விளக்கினார். பாடலை எளிமைப் படுத்தியது பாரதி என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பாரதியின் பாடலில் பெண்ணடிமை கருத்து உண்டு. எனவே கருத்தை பிரித்து பார்க்க வேண்டும் என்று கூறி பகுத்தறிவின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
பயிற்சியாளர் தேவி "இறந்த பின் உயிர் போய் எங்கு சென்று அடையும்?" என்று வினவினார். இறந்தது இறந்தது தான் என்று கூறி ,அதற்கான விளக்கத்தை அளித்தார்.
பயிற்சியாளர் அவ்வை நன்னன் நரகம் என்ற தண்டனை உடலுக்கா? ஆன்மாவுக்கா? என்ற கேள்வியை எழுப்பி ,ஆன்மா கடவுளிடமிருந்து வந்தது என்கிறார்கள். அப்ப தண்டனை கடவுளுக்கு தானே? என்று கேட்டதற்கு எளிமையாக புரியும்படி அருமையாக விளக்கம் அளித் தார்கள். பயிற்சியாளர் மாதேஷ் என்பவர் ஆத்மா எங்கு போகும்? ஒரு வகை எனர்ஜி என்பதையெல்லாம் கேட்டார்கள். அதற்கு நிறைய விளக்கங்களை அளித்தார்.
பயிற்சியாளர் சிந்தியா இறந்த அம்மா அப்பா படம் வைத்து படையல் வைப்பது பற்றிய கருத்து என்ன? என்று கேட்டார்கள்.
மூதாதையர் நினைவு போற்றுதல் பிரச்சினை இல்லை. வழிபாடு என்பது தான் மூட நம்பிக்கை என்பதைப் பற்றி கூறி, திதி சடங்குகள் பற்றியும் கூறினார்கள்.
பயிற்சியாளர் ரவி மோகன் என்பவர் கேட்ட கேள்விக்கு இறந்தவுடன் எட்டாம் நாள், ஏழாம் நாள் என்று கூறு கிறார்களே. இது கட்டுக்கதையா? என்றதற்கு, ஆம்.கட்டுக் கதையே. பலவகையான நம்முடைய பலவீனமான நிலையை பயன்படுத்தி மத மூடநம்பிக்கை பரப்ப பயன்படுத்துகின்ற தந்திரம் அது என்பதை விளக்கினார்கள்.
இதற்கு விடிவு என்பது பிரச்சாரம்.. பிரச்சாரம்... பகுத்தறிவு பிரச்சாரம். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும். பின் அனைவருக்கும் பிரச்சாரம் எளிதாகி விடும் என்பதைக் கூறி கேள்வி நேரத்தை முடித்தார்கள்.
தொடந்து மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம் நன்றி கூறி பயிற்சியை நிறைவு செய்தார்கள்.
நிகழ்வில் 106 பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment