உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜன.12 பாலியல் தொழிலாளிகளுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்பார் மகிளா ஒருங்கிணைப் புக் குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கரோனா ஊரடங்கி னால் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை யின் போது அடையாளச் சான்று கேட்காமல் பாலியல் தொழிலாளர் களுக்கு ரேஷன் வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டியிருந்தது.
பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடை யாள அட்டை மற்றும் ஆதார் அட்டை வழங்குவது தொடர்பான நிலை அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இதற்கிடையில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு அல்லது பிற அடை யாள அட்டையை கேட்காமல் ரேஷன் விநியோகத்தை தொடர அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பாலியல் தொழிலாளி களுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என்று ஆதார் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொழிலாளிகளுக்கு அடையாள அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வழங்கவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment