பாரிஸ், ஜன. 19- பிரான்சில் கரோனா தொற்று நோயை அரசாங்கம் கையாளும் விதம், கரோனா பரி சோதனை மற்றும் தனிமைப்படுத் தல் நெறிமுறைகளை கண்டித்து ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள் ளன. அதிக அளவில் மாணவர் களை பள்ளியில் வைத்திருக்கும் வகையிலான தெளிவான விதி களை ஏற்படுத்த அதிகாரிகள் தவறி விட்டதாக ஆசிரியர்கள் சங்கங்கள் குற்றம்சாட்டி உள்ளன.
ஒமைக்ரான் பரவல் காரண மாக, பள்ளிகளின் வகுப்புகளை நடத்துவதற்கு தொடர்ந்து இடை யூறு ஏற்படுவதாகவும், பல பெற் றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி பெற முடியாமல் சிரமப் படுகிறார்கள், மருந்தகங்களுக்கு வெளியே பரிசோதனைகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார் கள் எனவும் ஆசிரியர்கள் கூறுகின் றனர்.
பள்ளிகள் இடையூறு இன்றி நடப்பதற்கு ஏதுவாக, பள்ளி ஊழி யர்களுக்கு 5 மில்லியன் உயர்தர முகக் கவசங்களை வழங்குவதா கவும், கரோனா தொற்று ஏற்பட்ட ஆசிரியர்கள் அல்லது பாதிக்கப் பட்ட நபருடன் தொடர்பில் இருந்து, தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக 3,000க்கும் மேற்பட்ட மாற்று ஆசிரியர்களை நியமிப்பதாகவும் அரசு உறுதி அளித்தது.
ஆனால், இதனை ஏற்க மறுத்த ஆசிரியர் சங்கங்கள், ஜனவரி 27 அன்று மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முன்னோட்டமாக, நாளை (20.1.2022) நடக்கும் போராட்டம் இருக்கும் என்று கூறி உள்ளன. பள்ளிகளில் கரோனா வேகமாக பரவி வருவதால், பணிக்கு வர முடியாத ஆசிரியர்களுக்கு பதிலாக போதுமான மாற்று ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ஆசிரி யர் சங்கங்கள் கூறுகின்றன.
கடந்த வாரம் ஆசிரியர்கள் திடீ ரென வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டதால் நாட்டில் சுமார் பாதி அளவில் ஆரம்பப்பள்ளிகள் மூடப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment