தொழில் புரிய மிகச் சிறந்த மாநிலங்கள் பட்டியல் தமிழ்நாடு முதலிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 20, 2022

தொழில் புரிய மிகச் சிறந்த மாநிலங்கள் பட்டியல் தமிழ்நாடு முதலிடம்

சென்னை, ஜன.20 தொழில் புரிய மிகச் சிறந்த மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்து உள்ளது. 

தமிழ்நாட்டில் 9 மாதங்களில் ரூ.1.44 லட்சம் கோடி முதலீடு ஈர்த்து உள்ளது. டாடா குழுமம், ஜே.எஸ்.டபிள்யூ. ரினியூவபிள், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டி.வி.எஸ். மோட்டார், அதானி குழுமம், லார்சன் அண்ட் டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் முக்கியமானவையாகும்.

குஜராத் மாநிலம் இந்த வரிசையில் 2ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.77,892 கோடி ஆகும். அதே போல 3ஆம் இடத்தில் உள்ள தெலங்கானாவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ. 65,288 கோடி ஆகும்.

இந்தியா முழுவதும் நடப்பு நிதி ஆண்டின் 9 மாதங்களில் 7,764 புதிய திட்டப் பணிகளில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு ரூ.12,76,679 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment