சென்னை, ஜன. 19- 8.1.2022 அன்று காலை 8 மணியளவில் சிகரம் சீரும் சிலம்பாட்ட கலைக்கூடத்தின் சார்பாக மாவட்ட அளவிலான முதல் வாகையர் பட்ட சிலம்பு போட்டிகள் சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள சனா பள்ளி வளாகத்திலுள்ள விளையாட்டு கலைக்கூடத்தில் நடைபெற்றது.
இந்த சிலம்பாட்ட போட்டி களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சார்ந்த 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தனித்திறன் மற்றும் தொடு முறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங் கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த சிலம்ப கலைக்கூடத்தின் தலைவர் குமார் ஏற்பாட்டில் நடை பெற்ற இந்த மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு அறிஞர் அண்ணா அவர்களின் வளர்ப்பு மகள் வள்ளி தமிழக சிலம்பாட்டம் மற்றும் தற்காப்பு கலை கழகத்தின் தலைவர் மகாகுரு பூவை.துரை, தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் முத்தையன். தாம் பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ் மற்றும் கருணை ராஜ்பால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட் டுத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் செந்தமிழ் சிலம்ப கலைக்கூடத்தின் மாநிலத் தலைவர் சங்கர் ராமசாமி, மாநிலச் செயலாளர் மோகன் அறிவானந் தம், தொழில்நுட்ப இயக்குநர் பரசுராமன், ரவி ஆசான் உள்ளிட்ட பல்வேறு சிலம்ப கழகங்களை சார்ந் தவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment