ஆரிய நோய்க்கு அரு மருந்தாய் ஆனவரே!
இழிவைச் சுமந்த மக்களுக்கு எழுச்சியைத் தந்தவரே!
இன எதிரியை எதிர்த்து இங்கு நின்றவரே!
என்றும் திராவிடத்தின் காப்பு அரணாய் இருப்பவரே!
எதிர்ப் போரும் உன்னையே இலக்காகப் பார்க்கின்றார்
ஏற்போரும் உனது சிந்தனையை சீலமாக ஏற்கிறார்
எல்லோரும் கருப் பொருளாய் காண்பது உன்னையே!
இறப்பிற்கு பின்னும் உனது பெருமை விந்தையே
இனிவரும் உலகம் உனக்கானது அறிவுத் தந்தையே
இதை எண்ணியே மகிழ்கிறது எங்கள் சிந்தையே!
- முனைவர் அதிரடி.அன்பழகன்,
கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment