காரைக்குடி கழக மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய மேனாள் செயலாளர் என்.எஸ்.கே. கங்காதரன் (வயது 62) நேற்று 18-01-2022 மதியம் காரைக்குடி முத்துராம லிங்கம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். செய்தி யறிந்ததும் மண்டல தலைவர் சாமி.திரா விடமணி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பெ.பாண்டிச்செல்வம், தி.மு.க. பிரமுகர் எஸ்.முரளி, அ.ம. மு.க. வட்ட செயலாளர் குணா பாண்டியன் பெரியாரியலாளர் தமிழ் கார்த்தி மற்றும் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். உடலில் கருப்புடை அணிவிக்கப்பட்டு அவரது குடும்பத்தினர் மரியாதை செய்தனர்.
- - - - -
குமரி மாவட்ட திராவிடர் கழக மாவட்ட மேனாள் தலைவர் ஆ.சண்மு கய்யா அவர்களின் மூத்தமகன் பெரியார் தொண்டர் ச.சம்பத் ( வயது 77 )அவர்கள் 17.1.2022 அன்று அவர்களுடைய தந்தை பெரியார் இல்லத்தில் (நாகர்கோவில்) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந் துகிறோம். அவரது உடல் நாகர்கோவில், ஒழுகினசேரி அப்டா சந்தை எதிரேயுள்ள அவரது சொந்த இடத்தில் எந்த விதமான சடங்குகளும் இன்றி அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு சந்திரா என்ற இணையரும், ச.பன்னீர் செல்வம் என்ற மகனும், முத்துச்செல்வி என்ற மருமகளும் ப.நவின்சம்பத் என்ற பெயரனும் ப.நிக்தா என்ற பெயர்த்தியும் உள்ளனர்.
No comments:
Post a Comment