எட்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு! உலகத் தமிழர் மாமணி விருது வழங்கல்! அமைச்சர்கள் துரைமுருகன் - செஞ்சி மஸ்தான் பங்கேற்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 1, 2022

எட்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு! உலகத் தமிழர் மாமணி விருது வழங்கல்! அமைச்சர்கள் துரைமுருகன் - செஞ்சி மஸ்தான் பங்கேற்பு!


சென்னை, ஜன. 1- எட்டாவது  உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும்  சென்னை  உலகளாவிய  பொருளாதார  உச்ச மாநாடு  2021  டிசம்பர்  27 முதல்  29  வரை  சென்னை ஹோட்டல்  லீ  ராயல்  மெரிடி யனில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக    நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை  சென்னை வளர்ச்சிக்  கழகம்  மற்றும் உலகத் தமிழர்கள் பொருளாதார  நிறுவனம்  மற்றும்  டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் சீரிய ஒருங் கிணைப்பில்  ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  

இந்த மாநாட்டு  வரவேற்புக்  குழு தலைவர் தொழிலதிபர் ஆர்.வீரமணி  உடன் இருந்து சிறப்புற நடத்தி கொடுத்தார்.

மாநாட்டை  தமிழக  அரசின்  நீர்வளத்துறை  அமைச்சர் துரை முருகன் தொடங்கி வைத்தார்.   நிறைவு   நாள் நிகழ்ச்சியில்  சிறு பான்மையினர்  நலன்  மற்றும்  வெளி நாடு  வாழ்  தமிழர்கள்  நலத் துறை  அமைச்சர்,  செஞ்சி மஸ் தான்  நிறைவு  செய்தும் வைத்தார். 

மாநாட்டில்  கயானாவின் முன்னாள்  பிரதமர்  டாக்டர் மோசஸ்               வீராசாமி நாகமுத்து,  மொரீஷியசின் முன்னாள்  குடி யரசுத் தலைவர்  டாக்டர்  பரம சிவம் பிள்ளை வையாபுரி, தென் னாப்பிரிக்காவின் நடால் மாகாண நிதி அமைச்சர் ரவி  பிள்ளை, சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின்  தூதர்  ஜெனரல்  ஒலேக் அவ்தீவ்  ஆகி யோர்  உரையாற்றினார்.

வேலூர்   வி.அய்.டி.   பல்கலைக்  கழகத்தின்  வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன், நாடாளுமன்ற  உறுப் பினர் மற்றும்  பாரத்  பல்கலைக் கழக   நிறுவனர்   டாக்டர் ஜெகத் ரட்சகன்,  சிங்கப்பூர் நாடாளுமன்ற  உறுப்பினர் சின்னக்கருப்பன்,  வி.ஜி.பி. குழும      நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம்,  பி.ஜி.பி. குழும   நிறுவ னங்களின் தலைவர்   டாக்டர்   பழனி ஜி.பெரியசாமி  ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர்.

கயானா  நாட்டு  ஒய்வு பெற்ற இந்திய தூதுவர் ஆர். மகாலிங்கம்,  தமிழ்நாடு  அரசின் தொழில்துறை கூடுதல் தலைமைச்      செயலாளர் கிருஷ்ணன், கத்தார், தோஹா  வங்கியின்  தலைமைச்  செயல்  அதிகாரி  டாக்டர் ஆர்.சீதா ராமன், சுவிட்சர்லாந்தில் உள்ள அய்.நா. சிரியா தூதுவர் ராஜா பி.ஆறு முகம், தமிழ்நாடு அரசின் கோ ஆப்டெக்ஸ்,     கைத்தறித் துறை  ஜவுளி  மற்றும்  கை வினைப்  பொருட்கள்  துறை செயலாளர்    தர்மேந்திரப் பிரதாப்  யாதவ்,  தோல்  நிறுவன மேம்பாட்டுக் குழும நிர்வாக  இயக்குநர்  ஆர்.செல்வம்,  தமிழ்நாடு அரசின் வழி காட்டுதல்  துறை,  நிர்வாக இயக்குனர்    பூஜா குல்கர்னி ஆகி யோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

கே.எஸ்.அழகிரி  (தமிழ் நாடு   காங்கிரஸ்   கமிட்டி தலைவர்),  சென்னை,  புதுச்சேரி  தொழில்  அமைச்சர் நமச்சிவாயம்,   ஆந்திர பிர தேச தொழில்துறை இயக்குநர் செல்வி சிறீஜானா, அய்.ஏ.எஸ்., ஆகியோர் முதலீடு  குறித்து உரையாற்றினர்.

மாநாட்டில்  தலைசிறந்த தமிழர்களுக்கு  ஒவ்வொரு ஆண்டும்  "உலகத்தமிழர் மாமணி"  விருது  வழங்குவது  போல  இந்த  ஆண்டும் தலை  சிறந்த  தமிழருக்கு "உலகத்  தமிழர்  மாமணி" விருது,  உயர்  நீதிமன்ற  நீதிபதி  ஆர்.  மகாதேவன்  வழங்கினார்.

இதில் சிறப்பு விருந்தின ராக  டாக்டர்.இராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற உறுப்பினர்  (இலங்கை),  டாக்டர். சந்திரிகா      சுப்ரமணியம் வழக்குரைஞர்     (ஆஸ் திரேலியா),  கணேசன்  அரி  நாராயணன்,  தொழிலதிபர்  (ஜப் பான்)  டாக்டர்.நாசே.இராமச் சந்திரன்,  வேந்தர்  அமெத், நிகர் நிலை பல்கலை கழகம் (சென்னை), சிவக்கொழுந்து முன்னாள்  சட்டப்  பேரவை தலைவர்         (புதுச் சேரி), டாக்டர். தசரத செட்டி கல்வியாளர்,  டர்பன்  (தென் னாப்பிரிக்கா),  சின்ன  கருப்பன் முன்னாள்   நாடாளுமன்ற உறுப் பினர் (சிங்கப்பூர்) ராஜா துணைத்  தலைவர்  தமிழ் கல்வி   கழகம்   (டெல்லி), லட்சுமணன்  தொழி  லதிபர் (துபாய்)   சிவமூப்   பனார் தொழிலதிபர்  (அமெரிக்கா). உலகம் முழுவதும் திருவள்ளுவர் சிலை நிறுவி வரும்     வி.ஜி.சந்தோஷம் அவர்களுக்கு சிறப்பு விருதும்  வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment