இந்த நிலையில் உத்தரகாண்டில் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன் றில் பேசிய பிரதமர் மோடி, லிபு லேக் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் எனக்கூறினார். இதைப்போல இருநாட்டு எல்லை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு நிலை யானது என காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகமும் தெரிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து லிபுலேக் பகுதியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் என இந்தியா வுக்கு நேபாளம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.
இது குறித்து நேபாள அரசு செய்தி தொடர்பாளர் ஞியானேந் திர பகதூர் கார்கி கூறுகையில், ‘மகாகாளி நதிக்கு கிழக்கே உள்ள லிபுலேக், லிம்பியதுரா மற்றும் கலாபானி பிராந்தியங்கள் நேபா ளத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகும். எனவே நேபாள பிராந்தியத் தில் தன்னிச்சையாக நடைபெறும் எத்தகைய கட்டுமானங்களையும் இந்தியா நிறுத்த வேண்டும்’ என தெரிவித்தார்.
No comments:
Post a Comment