புதுதில்லி, ஜன.2- இந்தி யாவிலேயே பெண்க ளுக்கு எதிரான குற் றங்கள் நிகழும் மாநிலங் களில் பா.ஜ.க. ஆளும் உத்தரப் பிரதேசம் முதலி டத்தைப் பெற்றுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women - NCW) வெளியிட்ட தரவுகள் மூலம் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2021-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 31 ஆயி ரம் என்ற எண்ணிக்கை யில் பதிவாகி இருக்கின் றன. 2020-இல் பெறப் பட்ட 23 ஆயிரத்து 722 புகார்களுடன் ஒப்பிடு கையில், 2021-இல் பெண் களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 30 சதவிகிதம் அதி கரித்துள்ளது.
அத்துடன், இந்த எண்ணிக்கை, 2014-க்குப் பிறகு பதிவான அதிக பட்ச குற்ற எண்ணிக்கை ஆகும். ஏனெனில், 2014-ஆம் ஆண்டில் அதிக பட்சமாக 33 ஆயிரத்து 906 புகார்கள் அளவிற்கு பெறப்பட்டிருந்தன. 2021-இலும் குற்ற எண் ணிக்கை அதிகரித்து இருப்பதுடன், இவற்றில் சரிபாதிக் கும் அதிகமான குற்றங்கள் உத்தரப் பிர தேசத்தில் மட்டும் பதிவா கியுள்ளன. தேசிய மகளிர் ஆணையத் தரவுகளின் படி, நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான 30 ஆயிரத்து 864 புகார் களில், அதிகபட்ச புகார் கள், மரியாதையுடன் வாழ் வதற்கு அனுமதிக்கப் படாதது என்ற உரி மையின் கீழ்- அதாவது, பெண்களுக்கு உணர்வுப் பூர்வமாக பாதிப்பை ஏற் படுத்துதல் வகைப்பாட் டிற்குள் அமைந்துள்ளன.
இவ்வாறு, பெண் களுக்கு உணர்வுப் பூர்வ மாக பாதிப்பை ஏற்படுத் துவது தொடர்பான விஷ யத்திலும் அதிகமான வழக்குகள் உத்தரப் பிர தேசத்தில்தான் பதி வாகி யுள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிர தேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 15 ஆயிரத்து 828 ஆக பதி வாகியுள்ளது. அதைத் தொடர்ந்து டில்லியில் 3,336 ஆகவும், மகா ராட்டிராவில் 1,504, ஆக வும், அரியானாவில் 1,460 ஆகவும், பீகாரில் 1,456 வழக்குகளாகவும் பதிவா கியுள்ளன. வீட்டில் நடக் கும் வன்முறை தொடர் பாக நாடு முழுவதும் 6,633 வழக்குகளும், வர தட்சணைக் கொடுமை என்ற அடிப்ப டையில் 4,589 வழக்குகளும் பதி வாகியுள்ளன.
No comments:
Post a Comment