புதுடில்லி, ஜன.20 ‘பல பல்கலைகள், கல்வி அமைப்புகள், தங்கள் பாடத்திட்டங்களை ‘இணையம்’ வாயிலாக நடத்துவதற்காக கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ‘பிரன்சைஸ்’ எனப்படும் உரிமம் வழங்குகின்றன.
‘இதுபோல் நடத்தப்படும் பாடத்திட்டங்களுக்கு எந்த அங்கீகாரமும் அளிக்கப்படாது’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு, ஏ.அய்.சி.டி.இ., எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை வெளியிட்டு உள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
பல பல்கலைகள், கல்வி அமைப்புகள், தங்கள் பாடத்திட்டங்களை நடத்துவதற்காக கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரன்சைஸ்எனப்படும் உரிமம் வழங்குகின்றன. பல்கலைகளின் அங்கீகாரத்துடன் பாடத்திட்டங்களை நடத்துவதாக இந்த நிறுவனங்கள் ஊடகங்களில் விளம்பரம் செய்து வருகின்றன.
சட்டவிதிகளின்படி இது போன்று பிரன்சைஸ் வழங்குவதற்கு கல்வி அமைப்புகளுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு ‘இணையம்’ அல்லது தொலைதூர கல்வி முறையில் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களால் நடத்தப்படும் பாடத்திட்டங்களுக்கு அங்கீகாரம் கிடையாது. இதுபோன்ற கல்வி திட்டங்களில் சேருவதற்கு முன், மாணவர் மற்றும் பெற்றோர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.விதிகளை மீறி பிரன்சைஸ் முறையில் பாடத்திட்டங்களை நடத்தும் பல்கலைகள் மற்றும் கல்வி அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment