சென்னை,ஜன.11- அரசுக்கு சொந்தமான இடங்கள், அரசு புறம்போக்கு இடங்கள், நீரா தாரப்பகுதிகள் என பல்வேறு இடங்களை ஆக்கிரமித்து கோயில்கள் கட்டப்படுவதும், அதனை இடிப்பதற்கு நீதிமன்றம் உத்தர விடுவதும், அரசுத்துறையினர் அவ்வப்போது இடிக்கும் பணிகளையும் செய்து வருகின் றனர். தாம்பரம் வரதராஜபுரத்தில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து ஆஞ்சநேயர் கோயில் கட்டப்பட் டிருந்தது.
தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறையினர் ஆக்கிரமித்துக்கட்டப் பட்ட அக்கோயிலை இடிக்க முடிவு செய்து, கோயில் நிர்வாகத்துக்கு அறிவிக்கை செய்தனர்.
கோயில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிக்கப் பட்ட கோயிலை தாங்களாக அகற்றிக்கொள்ள முன்வரவில்லை. ஆகவே, கடந்த 19.12.2021 அன்று ஆக்கிரமிக்கப் பட்ட அக்கோயிலை இடிக்க அதிகாரிகள் சென்றபோது சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். இந்நிலையில், நேற்று (10.1.2022) காவல் துறையினரின் பாதுகாப்புடன் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த ஆஞ்சநேயர் கோயிலை பொக்லைன் எந்தி ரத் தைக் கொண்டு இடித்தனர்.
இதேபோன்று பல்வேறு இடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயில்கள்,
வழி பாட்டிடங்களையும் இடிக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அரசுத் துறையினர் அதனைச் செயல் படுத்தும் போது இடை
யூறாக உள்ளவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment