கண்ணந்தங்குடி கீழையூர் பெரியார் படிப்பகம் புதுப்பிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

கண்ணந்தங்குடி கீழையூர் பெரியார் படிப்பகம் புதுப்பிப்பு

கண்ணந்தங்குடி, ஜன. 19- 14.01.2022 அன்று தை 1 தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன் னிட்டு ஒரத்தநாடுவட்டம் கண்ணந்தங்குடி கீழையூ ரில் 18 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவரும்

கே.ஆர்.சி.நினைவு "பெரியார் படிப்பகம்", தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம், பெரியார் சிலை ஆகியவை புதுவண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டுள் ளன. படிப்பகத்தின் உட் புறம் சீரமைக்கப்பட்டு படிப்பகத்திற்கு நாளிதழ் மற்றும் வார இதழ்களை வழங்கும் நன்கொடையா ளர்களின் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தலைவர்களின் படங்கள் அலங்கரிக்கப்பட்டு அழ குற அமைக்கும் பணியில் தஞ்சை மாவட்ட இளை ஞரணி செயலாளர்

நா.வெங்கடேசன், தென் சென்னை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்

. சிவசீலன், கண்ணந்தங் குடி கிளைக் கழக இளை ஞரணி தலைவர் ராஜ துரை, கு.கவுதமன், .தமி ழரசன், காவியன்,

.செ.கபிலன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

இப்பணி நடைபெறும் போது தஞ்சை மாவட்ட செயலாளர் .அருண கிரி பார்வையிட்டு ஆலோ சனை வழங்கினார். அப் போது கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல், அரங்க. குமரவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment