கரோனா ஊரடங்கு: உதவி மய்ய எண் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 12, 2022

கரோனா ஊரடங்கு: உதவி மய்ய எண் அறிமுகம்

சென்னை, ஜன.12  ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோர் உதவி எண்ணை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அமலில் இருந்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு பல்வேறு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண் 100 மற்றும் 112 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் காவலன்  செயலியை பயன்படுத்தலாம் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கரோனா ஊரடங்கு குறித்து தகவல்கள் பெறவும், சந்தேகங்களை கேட்கவும், கரோனா கட்டுப்பாட்டறை உதவி மய்யம் 94981 81236, 9498181239, 72007 06492 மற்றும் 72007 01843 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

கரோனா தடுப்பூசி மய்யங்கள்

இரவு 10 மணிவரை இயங்கலாம்  மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம்

புதுடில்லி, ஜன.12 கரோனா தடுப்பூசி மய்யங்கள் தினமும் இரவு 10 மணிவரை இயங்கலாம் என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கூறியுள்ளது.

 அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி  ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கரோனா தடுப்பூசி மய்யங்கள் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரைதான் இயங்க வேண்டும் என்ற ஒரு கருத்து பரவி வருகிறது. ஆனால், இதுபோன்று எந்த நேரக் கட்டுப்பாடும் நிர்ணயிக்கப்படவில்லை.

தடுப்பூசி மய்யம் செயல்படும் நேரம், அங்குள்ள தேவையை பொறுத்தது ஆகும். தேவை அதிகமாக இருந்தால், கூடுதலாக குழுக்களை ஏற்பாடு செய்து தடுப்பூசி போடலாம்.

தடுப்பூசி மய்யம் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கக்கூடியதுதான். போதிய ஊழியர்களும், கட்டமைப்பு வசதிகளும் இருந்தால், தடுப்பூசி மய்யம் இரவு 10 மணி வரை செயல்படலாம்.

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பூசி மய்யங்களில் கரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வரிசையிலும், காத்திருப்பு பகுதியிலும் இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும். தடுப்பூசி திட்டத்தில் புதிய மைல்கல்களை எட்டுவதில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment